'என்ன கொஞ்சம் கூட கேப் இல்ல' ... டிஸ்டன்ஸ் மெயின்டையின் பண்ணுங்க பா ... கொரோனாவை பொருட்படுத்தாத இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், சென்னை அருகே இளைஞர்கள் சிலர் உணவுக்காக ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு வரிசையில் நின்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் இறங்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. வெளியில் இறங்கும் போது ஒருவருக்கு ஒருவர் சிறிய இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சில மக்கள் கொரோனா குறித்த அச்சமில்லாமல் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையம் அருகேயுள்ள அரசு முகாமில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு நிற்கின்றனர். பொது இடங்களில் நிற்கும் போது இடைவெளியைக் கடைபிடிக்க சொல்லியும் எந்தவித அச்சமும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சமூக விலகல் மற்றும் விழிப்புணர்வு எங்கே என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது. மேலும், அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

TAMILNADU, LOCK DOWN, CORONA AWARENESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்