'CM-அ என் கோட்டைக்கு வர சொல்லுங்க'... 'கொரோனாவ கண்ணுல காட்டுங்க'... 'கெத்து' காட்டிய இளைஞரை வச்சு செஞ்ச போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவின் போது வெளியில் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் சில கட்டுப்பாடுகளுடன் வந்து செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அறந்தாங்கி பகுதியில் வெளியே சுற்றி திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் விசாரித்த போது அந்த இளைஞர் போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'கொரோனா வைரசை எனது கண்ணில் காட்டுங்கள். முதலமைச்சரை என்னிடம் வந்து பேச சொல்லுங்கள். எங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்றால் போலீசார் ஆகிய நீங்களும் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் பேசி அந்த இளைஞர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கிருந்த போலீசார் அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.
சாலையோரம் போலீசாரிடம் கத்திப் பேசிக் கொண்டிருந்த இளைஞர் காவல் நிலையம் சென்றதும் போலீசாரின் லத்திக்கு முன் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டார். மேலும் தான் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும், வெளியில் சுற்றித் திரியாமல் வீட்டிலேயே இருந்து கொள்வதாகவும் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹோட்டல் இல்லாதனால எச்சி இலையும் இல்ல' ... 'காலையில இருந்து யாரையும் காணோம்' ... ஊரடங்கால் தளர்ந்து போன ஆதரவற்றோர்!
- 'மதுரையில்' கொரோனாவுக்கு இறந்தவரின் 'இறுதிச் சடங்கு'... வெறும் '4 பேருக்கு' மட்டுமே 'அனுமதி'... தெரு முழுவதும் 'தடுப்புகள்' ... 'உருக வைக்கும் சோகம்'
- 'என்ன கொஞ்சம் கூட கேப் இல்ல' ... டிஸ்டன்ஸ் மெயின்டையின் பண்ணுங்க பா ... கொரோனாவை பொருட்படுத்தாத இளைஞர்கள்!
- 'மேள, தாள' ஆரவாரம் இல்லாமல் ... 'உறவினர்கள்' கலந்து கொள்ளாமல் ... 'சட்டுபுட்டு'ன்னு சாலையிலேயே நடந்து முடிந்த திருமணம்!
- "இங்கேயே சாப்பிடுங்க.... இங்கேயே தூங்குங்க..." "இனிமே ஹாஸ்பிட்டல் தான் உங்க வீடு..." 'டாக்டர்கள்' வீட்டுக்குச் செல்ல 'தடை...'
- 'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. "லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை..." 'திணறும்' அதிகாரிகள்...
- அசாமில் உயிரிழந்த 'தமிழக ராணுவ வீரர்' ... மூன்று நாட்களாகியும் ... உடல் கிடைக்காமல் சோகத்தில் தவிக்கும் 'குடும்பம்'
- 'அண்ணே, இந்த ஒன் மீட்டர் டிஸ்டன்ஸ்' ... அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு ... பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மக்கள்!
- 'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!