‘பள்ளி தோழி மீது கொண்ட காதல்’... ‘இளம்பெண் செய்த பகீர் காரியம்’... 'பதறிய குடும்பம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணமாகி 6 வயது குழந்தை உள்ள பள்ளி தோழி மீது கொண்ட காதல் காரணமாக, பெண் ஒருவர் திருநம்பியாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த சுகன்யாவும், எப்ஸியாவும் பள்ளி பருவ தோழிகள். மதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2007-ல் 10-ம் வகுப்பு வரை படித்த இவர்கள், எப்போதும் ஒன்றாக சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். எப்ஸியா பெண்ணாக இருந்த போதிலும், நாளடைவில் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால், அவர் ஆணாக மாற தொடங்கியதால் இருவரின் நெருக்கத்தை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012-ல் ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சுகன்யாவை திருமணம் செய்து கொடுத்தனர். 7 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இவர்களுக்கு ஆறு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ராஜேசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவரால் சரிவர வெளியில் எழுந்து நடக்க இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற சுகன்யா, தனது பள்ளித்தோழி எப்ஸியாவை சந்தித்துள்ளார். நீண்டநாள் பழகிவிட்டு பிரிந்து சென்ற இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு மீண்டும் நட்பை தொடர்ந்துள்ளனர்.

அப்போது சுகன்யா தனது கணவருக்கு விபத்து நடந்திருப்பது பற்றியும், அதனால் தன்னுடைய வாழ்க்கையில் தினமும் சோதனையாக இருப்பதாகவும் சொல்லி அழுதுள்ளார். அப்போது எப்ஸியோ, "நான் இருக்கேன்.. நீ எதுக்கும் கவலைப்படாதே.. என்கூட வந்துடு.. புதுசா ஒரு வாழ்க்கையை தொடங்கலாம்" என்று சொல்லி உள்ளார். அவரது ஆறுதல் பேச்சில் மயங்கிய சுகன்யா, உடனே தன்னை அழைத்து சென்றுவிடுமாறு கூறி அடம் பிடித்துள்ளார். மேலும் தங்களது குடும்ப வாழ்க்கையை தொடர ஏதுவாக தனது பெயரை ஜெய்ஸன் ஜோஸ்வா என்று மாற்றிக் கொண்ட எப்ஸியா, அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை திருநம்பியாக மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரையிலுள்ள ஒரு தனியார் மாலில் சுகன்யா வரவேற்பாளராகவும், திருநம்பியான ஜோஷ்வா காவலாளியாகவும் பணிசெய்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வரும் நிலையில், சுகன்யாவின் வீட்டார் அவரது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் திரும்பி வருமாறு கூறியுள்ளனர். தன்னுடைய 6 வயது குழந்தையை தம்பி வீட்டில் தவிக்க விட்டு, திருநம்பியுடன் குடித்தனம் நடத்திவரும் சுகன்யாவை மீட்க அவரது குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து சுகன்யா, தனது 6 வயது மகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் புகார் அளித்தார்.இந்த புகார் தொடர்பாக  விசாரணைக்காக கேணிக்கரை காவல்நிலையம் வந்த அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று கொள்ளுமாறு சுகன்யாவுக்கு, போலீசார் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்

TRANGENDER, MADURAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்