செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்போனில் பேசியபடி நடந்த சென்ற பெண்ணின் தலைமுடி கிரில் சிக்கன் இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தாய் மற்றும் உறவினர்களுடன் ஜவுளிக்கடைக்கு வந்துள்ளார். துணிகள் வாங்கிய பிறகு அவர்கள் பஸ் நிறுத்தம் அருகே வந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்தபோது மாணவியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் செல்போனில் பேசியபடியே மாணவி தனியாக சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள சிக்கன் கடையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கிரில் சிக்கன் இயந்திரத்தின் சுழலும் சக்கரத்தில் மாணவியின் முடி எதிர்பாராதவிதமாக் சிக்கிக்கொண்டது. அடுத்த நொடிகளில் மாணவியின் முழு முடியும் அதில் சிக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் மாணவி அலறியுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் கிரில் கருவியின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து முடியை வெளியே எடுக்க முயன்று முடியாததால், முடியை வெட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் முழு முடியும் இயந்திரத்தில் சிக்கி இருந்ததால் மெக்கானிக்கை வரவழைத்து, இயந்திரத்தை கழற்றி மாணவியை மீட்டனர். இதில் மாணவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது ‘வேறலெவல்’ ஐடியாவா இருக்கே.. திருட வந்த கொள்ளையர்களுக்கு ‘தண்ணீ’ காட்டிய சென்னை இல்லத்தரசி..!
- திடீரென வலியில் துடித்த கர்ப்பிணி!.. 12 கிமீ-க்கு அப்பால் மருத்துவமனை!.. 'இந்த 'பனி'யில என்ன செய்றதுனே தெரியல'!.. அதிரடி முடிவெடுத்த இளைஞர்கள்!!
- 10 வருஷம் ‘துப்புரவாளராக’ இருந்த ஆபிஸ்.. அதே இடத்துக்கு இப்படி வருவேன்னு நினைக்கவே இல்ல.. திரும்பி பார்க்க வைத்த பெண்..!
- ஆண் நண்பரின் மனைவியை ‘பழிவாங்க’ பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- ஆண் நண்பருடன் ‘மனைவி’ தலைமறைவு.. வாடகைக்கு குடி வைத்ததால் வந்த வினை.. கணவர் கொடுத்த புகாரால் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
- இன்ஸ்டாகிராமில் அறிமுகம்.. ‘அக்கா’னு தான் கூப்பிடுவான்.. ஆனா இப்படி ஏமாத்துவான்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!
- ‘ஏம்மா அப்படி பண்ண’!.. வீடியோ காலில் கதறியழுத தாய்.. மனதை உருக்கிய சம்பவம்..!
- ‘கவலைப்படாதீங்க’.. இனி உங்க வீட்டு ‘வாடகையை’ நான் கொடுக்குறேன்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'லாக்டவுன்ல போர் அடிச்சுது'.. "அதுக்கு?".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா?'.. தெறிக்கவிட்ட இளம் பெண்!
- 'ஒன்பது மாதங்களாக பெண் ஒருவர் அனுபவித்த வேதனை’... ‘முயற்சியை விடாமல்’... ‘சிகிச்சை அளித்து வெற்றி கண்ட மருத்துவர்கள்’...!!!