'பொண்ண எம்.பி.பி.எஸ் ஆக்கணும்' ... 'டெய்லர் தந்தையின் வைராக்கியம்'.... 'ஒரு நொடியில் தகர்ந்த மொத்த கனவு'... நொறுங்கி போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் கஷ்டப்பட்டாலும் தனது மகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என உழைத்த, ஏழை தந்தையின் கனவை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது இளம் பெண் மருத்துவரின் மரணம்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. டெய்லர் வேலை செய்து வரும், இவர் தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை, கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். மகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு உழைத்த அவரது கனவு நிறைவேறியது. அகிலா பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து பெரும் சிரமங்களுக்கு இடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்த அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க, அவரது பணியை மருத்துவமனை நிர்வாகம் மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றைப் பெற பூவந்தி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் (23) மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வாங்கி கொண்ட அகிலா, மனதில் பெரும் மகிழ்ச்சியோடும், அப்பாவிடம் தான் மருத்துவர் ஆகி விட்டேன் என்ற சந்தோச செய்தியைக் கூறுவதற்காக நண்பரோடு பைக்கில் வந்துள்ளார். அப்போது குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பணன் என்பவர் அகிலா வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கிக் காயமடைந்த மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச்சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து பெரும் கஷ்டங்களுக்கு நடுவில் நன்றாகப் படித்து, 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பினை நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இறந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமல்லாது, சக மருத்துவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு அகிலா குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
- 'சென்னையை சிவப்பு மண்டலமாக்கிய கொரோனா...' 'இந்த 5 மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்பு...' 'கட்டுப்பாட்டை அதிகப்படுத்த முடிவு...'
- சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம்..? அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்..!
- ஒருவேளை ‘சாப்பாட்டுக்காக’ 4கிமீ வெயிலில் காத்திருந்த மக்கள்.. ‘இந்த நாட்டுக்கு இப்டியொரு சோதனையா’!.. கலங்க வைத்த ட்ரோன் வீடியோ..!
- 'என்ன' நடந்தாலும் 'நிச்சயம் பண்ணிய' பெண்ணை 'கல்யாணம்' பண்ணியே 'தீருவேன்'!.. கொரோனா லாக்டவுனால் மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!'
- 'மே 4-ஆம் தேதி முதல் லாக்டவுன் நீட்டிப்பு!'.. 'இங்கெல்லாம் பேருந்துகள் இயங்கும்!'.. 'தனியார் நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம்!'.. ''மேலும் பல விபரங்கள் உள்ளே!'
- தமிழகத்தில் 'இன்று(மே 2)' அதிகபட்சமாக 231 பேருக்கு 'கொரோனா'!.. 'சென்னையில்' மட்டும் 1000த்தை 'தாண்டியது'! மொத்த எண்ணிக்கை 2757 ஆக உயர்வு!
- 'ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா'... 'அதிர்ச்சியில் மக்கள்'... சென்னையில் அமலுக்கு வரும் கடும் விதிமுறைகள்!
- 'நம்ம சென்னைக்கு என்ன ஆச்சு'... 'எகிறிக்கொண்டே போகும் எண்ணிக்கை'... அதிர்ச்சி அளிக்கும் தகவல்!
- "பிரேதத்தை எடுத்துடுவாங்க.. நைட்டே போகணும் சார்!".. 'லாக்டவுனில்' தம்பதியரின் 'கோரிக்கை'!.. 'நெகிழவைத்த' காவலர்!