'இந்த நேரத்துல வேலை தான் நமக்கு முக்கியம்...' '108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்குறாங்களாம்...' 'சமூக இடைவெளி'னா என்ன...? குவிந்த இளைஞர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக இடைவெளி இன்றி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு திரண்ட இளைஞர்களால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியது முதல் அரசு ஒவ்வொரு நாளும் சமூக இடைவெளியும், மாஸ்க் அணிவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவுறுத்தி வருகின்றது. ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது என தெரிந்து இந்த நேரத்தில் வேலை தான் முக்கியம் எனக் கருதி எவ்வித சமூக இடைவெளியும் இல்லாமல் ஒன்றாக திரண்டுள்ளனர்.
நாகர்கோவிலில் இருக்கும் கோட்டார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளருக்கு ஆட்தேர்வு இரு நாட்களாக நடைபெற்றது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்த தேர்வு முதல் நாளில் அவசரகால மருத்துவ உதவியாளருக்கும் அடுத்த நாள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு நடைபெற்றது.
ஓட்டுநர் பணிக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காலையிலேயே ஒரே நேரத்தில் குவிந்துள்ளனர். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் குடியிருந்த இளைஞர்கள் சமூக இடைவெளியை சிறிதளவும் மதிக்காமல் ஒன்றாக நின்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்!.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்!.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்!
- 'புலம் பெயர் தொழிலாளியின் சடலம்...' '3 குழந்தைகளுடன்' சாலையோரம் 'நிர்க்கதியாக...' 'ட்ரக் ஓட்டுநரின்' மனசாட்சியற்ற 'செயல்...'
- ‘கார் ஓட்டியபோது’... ‘திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி’... ‘சென்னையில் நடந்த பயங்கரம்’!
- அதிவேகத்தில் 'மோதிவிட்டு' நிற்காமல் சென்ற 'கார்'... துரத்திச் சென்று பார்த்தபோது... 'ஒட்டுநர்' இருக்கையில் இருந்த 'நாய்'... 'அதிரவைக்கும்' சம்பவம்...
- "நீ எங்களுக்கு ஒரே பையன்..." "கடன் வாங்கியாவது காசு அனுப்புறோம்..." "நீ அந்த வேலைக்குபோகாதப்பா..." 'உருகிய பெற்றோர்...' 'மறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்...'
- சீனாவை ‘மிஞ்சிய’ பாதிப்பு... ‘மருத்துவ’ துறையில் இல்லையென்றாலும்... ‘பிரபல’ விளையாட்டு வீரர் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியத்தால்... ‘குவியும்’ பாராட்டுகள்...
- ‘ஆட்டோ ஓட்டியபோது திடீரென வந்த நெஞ்சுவலி’... 'டிரைவருக்கு நேர்ந்த சோகம்'... ‘தாம்பரம் அருகே நடந்த பரிதாபம்'!
- ஓடும் 'டெம்போவில்' அடைத்து வைத்து... 'இரவு' முழுவதும் 'கதறித்' துடித்த பெண்... 'கணவனிடம்' கோபித்துக் கொண்டு சென்றதால் நேர்ந்த 'கதி'...
- 'டிரைவர்' பணிக்கு திரண்ட 'பி.எச்.டி., எம்.ஃபில்.,' பட்டதாரிகள்... 'வேலை' என்னவோ 3 பேருக்குத்தான்... 'நேர்காணலுக்கு' வந்தவர்களோ '500க்கும்' மேல்...
- 'திடீரென' சாலையை கடந்த 'முதியவர்'... அதிர்ச்சியடைந்த 'வேன்' டிரைவர்... 'பள்ளத்தில்' பாய்ந்த பள்ளி 'வாகனம்'... 'அலறித்துடித்த' மாணவர்கள்...