‘இஞ்சினியரிங் படிச்சிட்டோமேன்னு கவலை படாதீங்க பாஸ்...’ இருக்கவே இருக்கு குடும்பத் தொழில்... ‘கஸ்டமரே துணை’ என அசத்தும் இஞ்சினியர் பூ கடை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குளித்தலை என்னும் கிராமத்தில் இன்ஜினீயர் கார்த்திக் என்னும் இளைஞர் பூ கட்டும் தொழிலில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் அனைத்து இன்ஜினீயர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கார்த்திக் என்ற இளைஞர் குளித்தலைப் அருகிலுள்ள, தாளியாம்பட்டி கிராமத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கார்த்திக்கின் இரண்டு அண்ணன்களும் பூ கட்டி விற்கும் தொழிலையே செய்துவருகின்றனர். கடன் வாங்கி இன்ஜினீயரிங் பயின்று வந்த கார்த்திக் படிப்பு முடித்து ரூ.15000க்கு ஒரு வேலையில் சேர்ந்துள்ளார். தன் குடும்பத்தில் ஒரு பையனாவது நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கும் கனவு பெற்றோர்களுக்கு நிறைவேறியது. ஆனால் அந்த கனவு ரொம்ப நாள் நிலைக்கவில்லை.

பணிச்சுமையின் காரணமாக சில உடல்நலக்கோளாரால் பாதிக்கப்பட்ட கார்த்திக் தன் வேலையை ராஜினாமா செய்தார். ஆறு லட்சம் கடன் வாங்கி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்த அவரது பெற்றோர் மனஉளைச்சல் அடைந்து அவரை எப்போதும் நச்சரித்து கொண்டு இருந்துள்ளனர்.

சிறிது காலம் யோசித்து கொண்டிருந்த கார்த்திக்கு ஒரு யோசனை கிடைத்தது. இஞ்சினியரிங் படித்து விட்டோமே என்று கவலைப் படாமல், குடும்ப தொழிலையே இன்றைய காலகட்டத்துக்கு அனைவரையும் கவரும் வண்ணம் செய்தால் என்ன என்று தோன்றியது. உடனே அவரைப் போலவே வீட்டில் இருக்கும் தன் மூன்று நண்பர்களை சேர்த்து கொண்டு புதிய வியாபாரத்தில் குதித்தார். முதலில் நஷ்டமே ஏற்பட்டாலும் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விடாமுயற்சி, தன்னம்பிக்கையோடு தன் தொழிலை நடத்தி, தற்போது அப்பகுதி மக்களே வியக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். மேலும், ஆன்லைன் மூலமாகவும் வியாபாரம் செய்து தனது தொழிலை முன் நகர்த்தியுள்ளார்.

அவர்களின் கடையின் பெயர் `இன்ஜினியர் பூ கடை' என்று பெயர் வைத்தது மட்டுமல்லாமல்,  `கஸ்டமரே துணை'னு போர்டில் போட்டிருந்ததும், பலபேரை கடையை ஏறெடுத்துப் பார்க்க வைத்திருக்கிறது.

FLOWERSHOP

மற்ற செய்திகள்