‘வீட்டில் வேலை பார்த்து வந்த இளைஞர்’... 'செய்த காரியத்தால்'... ‘குடும்பத்தினருக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வேலை செய்துவந்த வீட்டிலேயே, இளைஞர் ஒருவர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்துவருபவர் சீனிவாசலு. இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன் என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவு, வீட்டில் இருந்த அனைவருக்கும், இரவு உணவு தயார் செய்து கொடுத்துள்ளார் சுஜன். இதனை சாப்பிட்டப்பின் எல்லோரும் மயங்கி விழுந்தனர். சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த சீனிவாசலு, வீட்டில் இருந்த சுமார் 15 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய் பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் சுஜனும் அங்கு காணவில்லை. இதனால் பதறிப்போன அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  செல்ஃபோன் சிக்னல் உதவியுடன், 6 மணி நேரத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஏறி தப்ப முயன்ற சுஜனை கைது செய்தனர். அப்போது, உணவில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, சீனிவாசலு வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை சுஜன் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

CHENNAI, STEALS, ROBBERY, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்