Video: டிக்டொக் மோகம்.. பைக்கின் மேல் ஏறி நின்று.. 'தலைகீழாக' குதித்த இளைஞர்.. நொடிகளில் 'உயிரிழந்த' பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்க வேண்டும், தங்களது வீடியோ வைரலாக வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டிக்டொக் வீடியோக்கள் காரணமாக அதிக மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட ஆந்திராவில் ஒரு இளைஞர் அணைக்கட்டில் நின்றுகொண்டு வீடியோ செய்து உயிரிழந்தார்.

அதேபோல மற்றொரு மரணம் தற்போது நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பைக்கின் விளிம்பில் ஏறி நின்றுகொண்டு தலைகீழாக குதிக்கிறார். குதித்த வேகத்தில் கீழே விழுந்த அவரிடம் எந்த அசைவுமில்லை. அருகில் நின்றவர்கள் பதறிப்போய் ஓடிவந்து பார்த்தால் தலையில் அடிபட்டு அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் இதுபோல இன்னும் எத்தனை பேரின் உயிர் போகப்போகிறது? என ஆதங்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

TWITTER, TIKTOK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்