'அத்துமீறி' வீட்டுக்குள் நுழைந்து... 'காதலிக்க' மறுத்த பெண்ணுக்கு நிகழ்ந்த 'பயங்கரம்'... 'நீதிபதி' வழங்கிய 'அதிரடி தண்டனை'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தங்கதுரை என்பவர் அதேப்பகுதியை சேர்ந்த சுப்பிரிகா என்ற பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் தங்கதுரையின் காதலை சுப்பிரிகா ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் தங்கதுரை தொடர்ந்து சுப்பிரிகாவிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததால், காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் தங்கதுரையை அழைத்து எச்சரித்ததில், "இனி தொந்தரவு செய்யமாட்டேன்" என எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து அத்துமீறி சுப்பிரிகா வீட்டிற்குள் நுழைந்த தங்கதுரை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சுப்பிரிகா மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். தடுக்க வந்த சகோதரன் மற்றும் சுப்பிரிகாவின் தாயாரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தங்கதுரைக்கு, சாகும்வரை ஆயுள் தண்டனையும், சுப்பிரிகாவின் தாயார் மற்றும் சகோதரரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதற்கு தலா 7 ஆண்டுகள் சிறையும், கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

COIMBATORE, YOUNG MAN, LIFE IMPRISONMENT, MURDER CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்