'ஒண்ணு சேர்த்த பேஸ்ஃபுக்'...'பெத்தவங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை'... 'திருமணத்தில் முடிந்த காதல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முகநூல் மூலம் பழகி, இளைஞர் ஒருவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தா. திருநங்கையான இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த இருவருக்கும் நாளடைவில் காதல் மலர்ந்தது. மும்பையில் சினிமா படத்திற்கு ‘செட்’ அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் லட்சுமணன், தனது காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க இருவரின் திருமணமும், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்றது. இதனிடையே தங்களது திருமணம் குறித்து பேசிய மணமகன் லட்சுமணன் '' கடந்த ஒரு வருடமாக நாங்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தோம். எனது காதல் குறித்து பெற்றோரிடம் கூறிய போது முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் மனம் தளராமல் அவர்கள் சம்மதம் என்ற வார்த்தையை கூறும் வரையில் அவர்களை சமாதனம் செய்து பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது.
நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதனிடையே பி.எஸ்சி படித்துள்ள அமிர்தா தற்போது கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டா வர்ற??’... ‘இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்'!
- ‘உயிர பணயம் வச்சு திருட வந்தா..’.. மளிகை கடை ஓனருக்கு லெட்டர் எழுதிய வினோத திருடன்..!
- 'ரெண்டு பொண்ணுங்க ஆடுனா தப்பா?'... 'சென்னை பப்'பில் நடந்த பரபரப்பு'... வைரலாகும் பெண்ணின் பதிவு!
- திருமணத்துக்கு மறுத்த.. ‘பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ குடிபோதையில் உளறியதால் சிக்கிய கொலையாளி..
- ‘மொபைல் வேண்டாம், இது மட்டும் போதும்’... ‘வாட்ஸ் அப்’பில் புதிய வசதி’!
- ‘பெற்ற மகளிடம் தந்தை செய்த அதிர வைக்கும் காரியம்..’ தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..
- 'மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு'... ‘குடிபோதையில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்’!
- 'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!
- காதல் விவகாரத்தில்.. ‘பையனின் தாய்க்கு நடந்த பயங்கரம்..’
- 'கணவனை 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய மனைவி' ... 'நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்'!