‘வீட்டு வாசலை சீர்செய்தபோது’... ‘இளைஞருக்கு நடந்த விபரீதம்’... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் முன்பு இருந்த போர்டிகோவை சீர்செய்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே நத்த அள்ளியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் சக்திவேல் ( 27). கூலித்தொழிலாளியான இவருடைய வீட்டின் முன்பக்கமுள்ள போர்ட்டிகோவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதனை சக்திவேல் சரிசெய்து சீரமைக்க எண்ணினார். இதற்காக நேற்று மதியம் சக்திவேல் போர்ட்டிகோவில் இரும்பு கம்பியை பயன்படுத்தி சீரமைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அது இடிந்து விழுந்தது.
இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி சக்திவேல் பலத்த காயம் அடைந்து கதறித் துடித்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் சக்திவேலுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்னடா புது டெக்னிக்கா இருக்கு?’.. நூதன முறையில் டிக்டாக் செய்த இளைஞர்.. அதிரடியாக கைது! பரபரப்பு சம்பவம்!
- ‘போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்’.. ‘விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்’.. தேனாம்பேட்டையில் பரபரப்பு..!
- 'நோகாமல்' நொங்கு திங்க ஆசைப்பட்ட 'மைனர்'... 'பொடனியில்' தட்டி இழுத்து வந்த 'போலீசார்'... பொதுமக்கள் முன்னிலையில் 'மாங்கல்யம் தந்துனானே'...
- 'என் பொண்ண அவன் 'பைக்'ல உக்கார சொல்லி டார்ச்சர் பண்றான்!'... மாணவியிடம் தகராறு செய்யும் வாலிபர்!... 'மகள்' எடுத்த அதிரடி முடிவால்... விரக்தியில் 'தந்தை'!
- ‘ஏன்னா இது வாலிப வயசு!’ .. ‘பெண் காவலரை’ வீடியோ எடுத்த வாலிபர்.. ‘அதுக்கு அப்புறம்’ செய்த அதிர்ச்சி காரியம்!
- 'கணவர்' ரொம்பவே 'இடையூறு' செய்தார்... அதனாலதான் 'போட்டுத்தள்ள' முடிவெடுத்தேன்... 'கள்ளக்காதலர்களுடன்' கைதான மனைவி 'பகீர்' தகவல்...
- 'கல்லூரியில் காதல்'...'ஐயோ என் ஆளு முன்னாடியே அசிங்க படுத்திட்டாரே'... மாணவன் செய்த விபரீதம்!
- 'டிரான்ஸ்பார்மர் மீது ஏறி... மின்கம்பியை பிடித்து... தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!... நெஞ்சை உலுக்கும் காரணம்!
- “அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணுப்பா!”.. இளம் என்ஜினியர் எடுத்த சோக முடிவு!
- 'பட்டாக்கத்தியில்' தான் 'கேக்' வெட்டுவிங்களோ... 'ஜிகர்தண்டா' 'பாபிசிம்ஹா'ன்னு மனசுக்குள்ள நினைப்பு...கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துட்டு போங்க தம்பி...