'2 வருட காதல்'... 'கல்லூரியில் சேர அட்மிஷன் போட்ட இளம்பெண்'... பெற்றோருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகரம், அக்ரகாரம் தெருவைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் அரவிந்தசாமி. 25 வயது இளைஞரான இவருக்கும், அவரது பக்கத்துத் தெருவைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவரது மகளான ஹர்ஷாலட்சுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்கள். ஹர்ஷாலட்சுமி 12ம் வகுப்பு முடித்து விட்டு, தர்மபுரியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையே ஹர்ஷாலட்சுமியின் காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. மகளின் காதலைப் பெற்றோர் எதிர்த்து வந்த நிலையில், அவர் காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வந்துள்ளது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு ஹர்ஷாலட்சுமி உறவினர்கள் மூலம் கொலை மிரட்டல் வரவே காதல் ஜோடியினர் அங்கிருந்து பேருந்து மூலம் வந்து திருப்போரூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் உள்ள அரவிந்தசாமியின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் தங்களது மகளைக் காணவில்லை என ஹர்ஷாலட்சுமி பெற்றோர் தர்மபுரியில் உள்ள அதியான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அங்கிருந்து போலீசார் நேற்று ரத்தினமங்கலம் கிராமத்திற்கு வந்து அங்கு அரவிந்தசாமியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த காதல் ஜோடியினரை தர்மபுரிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து காதல் ஜோடியினர் அதியமான்கோட்டை போலீசாருடன் செல்ல மறுத்து நேற்று மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களுக்குத் தொடர்ந்து கூலிப்படை மூலம் மிரட்டல் வருவதாகவும், தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டும் தஞ்சம் அடைந்து புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில் நாங்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்குத் தர்மபுரிக்குச் சென்றால் எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும், நாங்கள் மேஜர் என்பதால் தங்களைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் கூறியுள்ளனர். இது குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரித்து வருகிறார்.

இதற்கிடையே Behindwoodsயை தொடர்பு கொண்ட இளம்பெண்ணின் தந்தை சாய் மகேஷ் மற்றும் அந்த பெண்ணின் சித்தப்பா ஹரி கூறுகையில், ''எங்கள் குடும்பத்தார் ஹர்ஷாலட்சுமியையும், அரவிந்த்சாமியையும் மிரட்டவில்லை என்றும் அவர்கள் காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்