'என் ஹஸ்பண்ட் கூட தான் போவேன்...' 'என் பொண்ணு கைநிறைய சம்பாதிக்குறா, அதனால...' கொலைமிரட்டல் விடுப்பதாக இளம் ஜோடி புகார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

13 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலர்கள் கல்யாணம் செய்ய முடிவெடுத்த பொழுது, தங்கள் பெற்றோர்கள் மூலம் அசம்பாவிதம் ஏற்படும் என்று கூறி நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு வந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினோதினி என்பவர் திருநெல்வேலி மாவட்டம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர். இவர்  ஒரு அரசு வங்கியில் பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ். ஏசுதாசும் வினோதினி என்பவரும் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

தங்களின் காதல் விஷயத்தை இருவரது பெற்றோர் வீட்டிலும் சொல்லி கல்யாணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதாலும், கைநிறைய சம்பாதிக்கும் மகளை, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடியாது என காரணம் சொல்லி வினோதினியின் வீட்டில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வேறொரு மாப்பிளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் பெண் வீட்டார்.

இதன் காரணமாக வினோதினியும் ஏசுதாசும் பதிவு திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். திருமணம் முடிந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்ததை அறிந்த வினோதினியின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து ரகளை செய்துள்ளனர், மேலும் வினோதினியின் உறவினர்கள், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு குவிந்தனர்.

மேலும் வினோதினியின் பெற்றோரை சமாதானம் செய்து கோட்டாறு காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்குமாறு கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதையடுத்து வினோதினியையும் அவரது காதல் கணவருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கோட்டார் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இருதரப்பிலும் விசாரணை நடத்திய போலீசார் வினோதினியிடம் யாருடன் செல்ல விருப்பம் என கேட்டதற்கு கணவருடன் தான் செல்வேன் என  கூறியதால், வினோதினியை ஏசுதாஸ் அவர்களுடன் அனுப்பி வைத்தனர் காவல் துறை அதிகாரிகள்.

LOVE, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்