‘3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை’.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள செல்லாண்டி நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமரன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த செரினா என்பவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 5 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த செரினா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் இவர்களின் வீடு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது குமரன் மற்றும் செரினா இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களது வீட்டில் ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ‘நான் குமரன் என் வீட்டில் உள்ள பொருள், வண்டி, டிவியை விற்று என் கடனை கட்டவும்’ என எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
- ‘தாய்க்கும் 3 மாத பெண் குழந்தைக்கும் நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’.. ‘கணவர் செய்த கொடூரம்’..
- ‘எல்லாமே சந்தோஷமாத்தான் போச்சு’... ‘கணவரிடமிருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்’... 'அதிர்ந்துப்போன மனைவி’!
- ‘இப்டியா பண்ணுவ நீ’... ‘கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு’... 'கலங்கி துடிக்கும் உறவினர்கள்'!’
- ‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..! பரபரப்பு வீடியோ..!
- ‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..
- ‘அது நடந்து 3 வருஷம் ஆச்சு’.. ‘இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசல’ அதனால...! அதிர வைத்த மாணவியின் தற்கொலை கடிதம்..!
- ‘ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘தகாத உறவில் ஈடுபட்ட கணவன்’.. ‘படுக்கை அறையிலேயே புகுந்து மனைவி செய்த காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘நெருங்கிய நண்பனோட தற்கொலை என்னை உடைய வச்சிருச்சு’.. பிரபல வீரர் உருக்கம்..!