‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், தன் பணியில் சேர்வதற்காக சாப்பாடு இல்லாமல் 450 கி.மீ. தூரத்தில் 20 மணிநேரம் நடந்தே சென்று இளம் கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்துள்ளார்.
கொரோனாவால் இந்தியா உட்பட மொத்த உலகமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, அதைவிட ஊரடங்கு உத்தரவால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உண்ண உணவில்லாமல், தங்கள் சொந்த ஊருக்கே பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் தனது பணியின் மீதான அர்ப்பணிப்பால், பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார் உத்தரப்பிரதேசம் எட்டாவாவைச் சேர்ந்த 22 வயதான கான்ஸ்டபிள் திக்விஜய் சர்மா.
இவர் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், தனது பேச்சிலர் டிகிரி தேர்வு எழுதுவதற்காக, தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கு கடந்த 16-ம் தேதி சென்றுள்ளார். இடையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் தேர்வு தள்ளிவைக்கப்பட, அங்கிருந்து பணியில் சேர கிளம்ப முயற்சித்துள்ளார். அப்போது, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், இவரது குடும்பத்தினர் மற்றும் இன்ஸ்பெக்டர் உட்பட யாரும் தற்போதைக்கு பணியில் சேர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதனை பொருட்படுத்தாத திக்விஜய் சர்மா, பணி மீது கொண்ட ஈர்ப்பால், கடந்த 25-ம் தேதி காலை 450 கி.மீ. தொலைவு உள்ள மத்தியப்பிரதேசம் ராஜ்கார்க்கிற்கு, சாப்பாடு இல்லாமல், 20 மணிநேரம் நடந்தும், சில இடங்களில் பைக்குகளில் லிஃப்ட் கேட்டும் மார்ச் 28-ம் தேதி வந்துள்ளார். நடந்தே வந்ததால் கால்கள் வீங்கியுள்ளதால் ஓய்வு எடுத்துவரும் இளம் கான்ஸ்டபிள் திக் விஜய்சர்மா, சீக்கிரமே பணியில் சேர உள்ளதாக கூறியுள்ளார். இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்!
- '60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி!'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு!!
- ‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்!
- 'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி!'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்!... என்ன நடந்தது?
- '1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'!
- சென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்!
- ‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது! மத்திய உள்துறை அமைச்சகம்!
- 'பொழுதுபோகலனு யாரும் இனி புலம்ப தேவையில்லை!'... வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் திட்டம்... பொதுமக்கள் அமோக வரவேற்பு!
- ‘உன் மனைவி எங்கே?’.. ‘கூலாக சிரிச்சிகிட்டே கணவன் சொன்ன பதில்’.. சென்னையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்..!
- ‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’!