'சர்ரென ஏறிய விலை'... 'அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்'... இன்றைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில தினங்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு தொழில் துறையில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதன் காரணமாகத் தங்கத்தின் தேவை கடுமையாக அதிகரித்தது. இதனால் அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. பின்னர் கொரோனா சிறிது கட்டுக்குள் வந்து தொழில்துறை சற்று ஏற்றம் பெற்றது. அதோடு 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதன் பின்னர் தங்க விலை சற்று குறைந்து வந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 64உயர்ந்து ரூ.4226-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.33808-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36680-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 1.90 ரூபாய் அதிகரித்து ரூ.68.50க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.68,500 ஆக உள்ளது.

தங்க விலை மீண்டும் உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்