‘கேப்பே விடாமல் வெளுக்கும் மழை’!.. சென்னை மக்களுக்கு ‘வெதர்மேன்’ சொன்ன முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் விடாமல் மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 170 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காற்று சுமார் 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman Pradeep John) தனது ட்விட்டர் பக்கத்தில் மழை குறித்து முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். அதில், ‘சென்னைக்கு இருந்த மோசமான சூழல் முடிந்தது. இனி அவ்வபோது மழை பெய்யும். மாலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் சராரியாக 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், சோழவரம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் 200 மி.மீ அளவை கடந்து மழை பதிவாகியுள்ளது. கும்மிடிப்பூண்டி, ரெட் ஹில்ஸ், மாமல்லபுரம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பெரம்பூர், எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

RAIN, HEAVYRAIN, CHENNAIRAINS, TNRAINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்