'5 பைசா'வுக்கு.. 1/2 பிளேட் 'சிக்கன்' பிரியாணி.. கட்டுக்கடங்காத கூட்டம்.. கடைமுன் 'குவிந்த' மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு 1/2 பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என திண்டுக்கல்லில் உள்ள பிரியாணி கடை ஒன்று அறிவித்தது.

5 பைசாவை எடுத்துக்கொண்டு முதலில் கடைக்கு வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர்.

ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் பிரியாணி வாங்க கடைமுன் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த முதல் 100 நபர்களுக்கு 5 பைசாவை வாங்கிக்கொண்டு பிரியாணி அளித்தனர்.

இதுகுறித்து அந்த கடையின் ஓனர் சேக் முஜிபூர் ரகுமான்,''உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்,'' என்பதற்காக உலக உணவு தினமான இன்று இந்த ஆபரை வழங்கியதாக அறிவித்தார்.

 

BIRYANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்