‘குழந்தையை வைத்து ஓடும் பேருந்தில்’... 'பெண்கள் செய்த அதிர்ச்சி காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஓடும் பேருந்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தி, பெண் ஒருவரிடம் நகைப் பறிப்பில் 2 பெண்கள் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த கிரிஜா என்பவர், தேனியில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக, மதுரையில் இருந்து அரசு பேருந்து மூலம் சென்றுக் கொண்டிருந்தார். கிரிஜாவின் அருகில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த 3 பெண்கள், குழந்தைக்கு வேடிக்கை காட்டுவது போல் நடித்து அனைவரது கவனத்தை  திசை திருப்பியுள்ளனர். பின்னர், கிரிஜா அசந்திருந்த சமயம் பார்த்து, அவரின் பையிலிருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த கும்பல் திருடியுள்ளது.

மேலும் ஆண்டிப்பட்டியருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் பேருந்து நின்றது. அப்போது, கிரிஜா அணிந்திருந்த தங்க சங்கிலியை அந்த கும்பல் பறிக்க முயன்றது. இதையடுத்து, கிரிஜா சத்தம் போடவே, பேருந்தில் இருந்து மூன்று பெண்களும் தப்பிக்க முயன்றனர். அதில் இரண்டு பெண்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SNATCHING, THENI, BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்