‘பெண்களை இனிமேல் அங்க உட்கார வைக்கக்கூடாது’.. அதிரடி உத்தரவிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு பேருந்துகளில் இன்ஜின் பேனட் மீது பெண் பயணிகளை அமர வைக்கக் கூடாது என போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமைந்துள்ள இன்ஜின் பேனட்டில் பெண்களை அமர வைக்கக் கூடாது. ஓட்டுநர்கள் பெண்களிடம் பேசிக்கொண்டு பேருந்தை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புகார் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு பேருந்துகளில் உள்ள இன்ஜின் பேனட்டுகளில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பயணம் செய்யும்போது டிரைவர்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுக்கின்றனர். இதனால் அவர்களது கவனம் சிதறி சில நேரங்களில் விபத்து நேர்ந்துவிடுகிறது என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காவும் ஓட்டுநர் அருகே உள்ள இன்ஜின் பேனட்டின் மீது பெண்கள் அமர்ந்து பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகம் தடைவித்துள்ளது. இதனை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BUS, WOMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்