அம்மாவுக்கு பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த மகன் - "இந்தப் பரிசுக்கு விலையே இல்லை" நடிகர் மாதவன் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரிசுகள் வழங்குவது பொதுவாக அன்பின் வெளிப்பாடு தான். அதுவும் நம்முடைய மகிழ்ச்சிக்காக வாழ்க்கையின் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய பெற்றோருக்கு நாம் அளிக்கும் சிறிய பரிசுகள் கூட அவர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதுக்கு இவ்வளவு செலவு பண்ற எனக் கேட்கும் அந்த கோபத்திற்குப் பின்னாலும் கண்களில் சில கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்கும்.
போன் பரிசு
இந்நிலையில், பாச மகன் ஒருவர் தனது அம்மாவிற்கு அவரது பிறந்தநாளில் மொபைல் போன் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,"இந்த போனின் விலை 8800 ரூபாய் தான்.ஆனால் அதற்கு என்னுடைய அம்மா அடைந்த சந்தோஷத்திற்கு விலையே கிடையாது. அவர்களின் பிறந்தநாள் பரிசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போனைப் பிரித்துப் பார்த்ததும், வழக்கமாக அம்மாக்களுக்கே உரிய சின்னக் கோபம் ஒன்றும் இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. வீடியோவில் அந்த அம்மா," என்னபெத்த சாமி.. ஏண்டி இப்படி பண்ற.. இவ்வளவு காசு செலவு பண்ற" எனக் கலங்கிய கண்களோடு போனை தன் மார்போடு அனைத்துக்கொள்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை நடிகர் மாதவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"இந்த மகிழ்ச்சிக்கு விலை இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பல பாச மகன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்