கல்யாண வீட்டுல திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. ஓடிப்போய் பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண் ஒருவர் துரதிருஷ்டவசமாக செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர்கள் மோகன் தாஸ் மற்றும் சுஜிதா தம்பதி. இவர்கள் இருவரும் அருகில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கின்றனர். இருவரும், திருமண மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாதையின் கீழே இருந்த செப்டிக் டேங்க் திடீரென உடைந்திருக்கிறது.
இதனால் மோகன் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிதா நிலை தடுமாறி உள்ளே விழுந்திருக்கின்றனர். இதனால் அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே, கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்கள் மூலம் உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, தீயணைப்பு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து தக்கலை தீயணைப்பு துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விரைந்து சென்று செப்டிக் டேங்கிற்குள் விழுந்த மோகன் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிதாவை மீட்டனர். ஆனால், காயம் காரணமாக சுஜிதா சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனால் திருமண வீடே சோகத்தில் மூழ்கியது.
இந்நிலையில், செப்டிக் டேங்கில் விழுந்ததால் படுகாயமடைந்த மோகன் தாஸை அங்கிருந்த அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். மற்றொருபுறம், வாய்க்காலில் விழுந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த வீரர்களை மீட்புப் படையினர் மீட்டிருக்கின்றனர்.
கன்னியாகுமரி அருகே திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண், துரதிருஷ்டவசமாக செப்டிக் டேங் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எங்க கிட்ட சரசம் பண்ணுறதுக்குன்னே வருவீங்களா டா?".. ரொமான்டிக்கா போஸ் கொடுத்த மாப்பிள்ளை.. உள்ள வந்து குரங்கு பாத்த வேலை!!
- ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து கூலித் தொழிலாளியின் மகளை பெண் கேட்ட இளைஞர்.. படுஜோராக நடந்த திருமணம்!
- யாரை முதல்ல போட்டோ எடுக்குறது?.. மாப்பிள்ளை - பெண் வீட்டார் இடையே வந்த தகராறு.. களேபரமான கல்யாண வீடு..!
- க்யூட்டா போஸ் கொடுத்துட்டு இருந்த புதுமண ஜோடி.. திடீர்ன்னு பின்னாடி நின்ன யானை செஞ்ச காரியம்.. "ஆத்தாடி, ஜஸ்ட் மிஸ்ஸு"!!
- அழையா விருந்தாளியாக கல்யாண வீட்டிற்கு போன கல்லூரி மாணவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. நெகிழ வைத்த சம்பவம்.
- ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. கடைசில இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சே..!
- “மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல..!!”.. அத்தனை சொந்த பந்தங்களையும் விமானத்துல கூட்டிட்டுப்போன மணமக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!
- "இப்டியா போட்டு உடைக்குறது?".. விருந்தினர் முன்னிலையில் மணப்பெண் பத்தி மாப்பிள்ளை சொன்ன ரகசியம்.. 😍
- அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சாப்பிட போன MBA மாணவன்.. கண்டுபிடித்து கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!
- நண்பர்களுடன் பந்தயம்.. மண மேடையில் வைத்து முத்தம் கொடுத்த மாப்பிள்ளை??.. அடுத்த செகண்ட்டே மணப்பெண் எடுத்த பரபரப்பு முடிவு..!