விருந்துக்கு அழைத்து.. வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்..! சேலத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கும் வகையில் பெண் ஒருவர் ஆபாசமாக போனில் பேசி வந்ததாக புகார் எழுந்துள்ளது.

Advertising
>
Advertising

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் சேலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. சேலத்தில் பிரபலமாக இருக்கும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 6 அரசியல் பிரமுகர்களை தேர்வு செய்து, அதில் 3 பேர்களிடம் போனில் கலைச்செல்வி சாட் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் பேசி நெருக்கம் ஆன அந்த பெண், ஒவ்வொருவரையும் தனி தனியாக வீட்டிற்கு விருந்து என்று கூறி அழைத்து இருக்கிறார். இந்த மூன்று பேரையும் வெவ்வேறு நாட்களில் வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்திலும் கலைச்செல்விக்கு செல்வம் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலைச்செல்வி எடுத்த வீடியோவை வைத்து செல்வம் அந்த அரசியல் பிரமுகர்கள் 3 பேரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. ‘உங்கள் கட்சியின் தலைமைக்கு இந்த வீடியோவை அனுப்பி விடுவோம், பணம் கொடுத்தால் சிக்கல் இல்லை’ என செல்வம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் சில அரசியல் பிரமுகர்கள் செல்வத்திற்கும், கலைசெல்விக்கும் பயந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

ஆனால் மிரட்டி வாங்கப்பட்ட பணத்தை பங்கு போடுவதில் செல்வம் மற்றும் ரூபக் என்ற நபருக்கும் இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. ரூபக் என்பவர் செல்வத்திற்கு உடந்தையாக இருந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தனக்கு வர வேண்டிய பங்கு வரவில்லை என்ற கோபத்தில் ரூபக், கலைச்செல்வியை கடத்தி கொண்டு போய் வீடியோ எடுத்து வாக்குமூலம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதாவது செல்வத்துடன் சேர்ந்துதான் அரசியல் பிரமுகர்களை மிரட்டி பணம் வாங்கியதாக கலைச்செல்வியிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளார். இந்த வீடியோவை ரூபக் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.இதனிடையே ரூபக்கிடம் இருந்து தப்பித்து வந்த கலைச்செல்வி, தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார்.

நாகேந்திரன் என்ற அரசியல் பிரமுகரின் ஆட்கள் தன்னை கொலை செய்ய முயல்வதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு வீடியோ ஒன்றை கலைச்செல்வி வெளியிட்டுள்ளார். கலைச்செல்வி ஏமாற்றிய 3 அரசியல் பிரமுகர்களில் ஒருவர்தான் நாகேந்திரன். தன்னிடம் ஏமாற்றம் அடைந்த விரக்தியில் தன்னை நாகேந்திரன் கொலை செய்ய முயல்வதாக கலைச்செல்வி கூறியுள்ளார்.

இந்த நிலையில் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக கலைச்செல்வி, செல்வம் மீது சேலம் காவல் நிலையத்தில் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். கலைச்செல்வியிடம் ஏமாந்த மற்ற அரசியல் பிரமுகர்கள் சர்ச்சையை தவிர்க்க வேண்டும் என்பதால் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கலைச்செல்வி மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கும் திட்டத்தில் போலீசார் உள்ளதாக கூறப்படுகிறது.

SALEM, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்