'வெண்டிலேட்டர்' மூலம் 'சிகிச்சை'!.. 'நோகாமல்' கைரேகையை 'களவாடிய' பெண்மணி.. மருத்துவமனையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டவர் அன்னலெட்சுமி. கணவரை இழந்த இவர், சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்.
சென்னைக்கு வந்த புதிதில் சாப்பாட்டுக்கடை நடத்தியபோது, மதுரையில் இருந்து வேலைத்தேடி வந்த செந்தில் என்கிற 19 வயதானவரையும், அவரது நண்பர்களையும் தத்தெடுத்து அன்னலெட்சுமி வளர்த்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், செந்திலுக்கு திருமணமாகி, குழந்தைகளோடு மதுரைக்கு சென்றுவிட்டார். இதனிடையே ஊரடங்கால் செந்திலால் சென்னைக்கு திரும்பி வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்னலெட்சுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு, அவரை பார்த்துக்கொள்ள அவரது சொந்த ஊரில் இருந்து, சகோதரி என்றொருவர் வந்து உடனிருந்துள்ளார். கடந்த நான்கைந்து நாட்களாக மூச்சுத்திணறல் அதிகமாகி அனனலெட்சுமிக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் மருத்துவமனை வந்த வளர்ப்பு மகன் செந்தில், மருத்துவரை பார்த்து அன்னலெட்சுமியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்ற நேரத்தில், அன்னலெட்சுமியின் சகோதரி என்று கூறியிருந்த அந்த பெண், அன்னலெட்சுமியின் இடது கையின் பெருவிரல் ரேகையை தான் வைத்திருந்த வெள்ளைக் காகிதத்தில் பதிந்துள்ளார். இதனால் அன்னலெட்சுமியின் கையில் மாட்டியிருந்த டியூப்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கழண்டு விழுந்தன. அதன் பின் அங்கு வந்த மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது அன்னலெட்சுமி உயிரிழந்ததும், அன்னலெட்சுமியின் பெருவிரலில் மை இருந்ததும் தெரியவந்தது. பிறகு வந்த செந்திலும் மருத்துவர்களும் அப்பெண்மணியை விசாரித்ததில் அன்னலெட்சுமிக்கு ஊரில் சொத்துக்கள் ஏராளமாக இருந்ததால், ஊரில் இருக்கும் தனது சகோதரிகள் அறிவுறுத்தலின்பேரில், அன்னலெட்சுமியின் கைரேகையை எடுத்ததாக அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.
அப்பெண்மணியை விசாரித்தவர்கள், “சுயநினைவை இழந்த பிறகு ஒருவரின் ரேகையை எப்படி எடுக்கலாம்” என்று கிடுக்குப்பிடியாக சரமாரியாக் கேட்டு வீடியோவாகவும் பதிவு செய்தனர். இதுகுறித்து சூளைமேடு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதோடு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வளர்ப்பு மகன் செந்தில் கேட்டுக்கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்களுக்கு பாதுகாப்பு இல்ல!'.. மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த டாக்டர்கள்... மர்மம் காக்கும் நாடு!.. பதறவைக்கும் பின்னணி!
- 'இதுனால தான் சென்னையில வைரஸ் வேகமா பரவுது!'.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?.. முதலமைச்சர் பழனிசாமி அதிரடி!
- 'கொரோனா டூட்டிக்கு போன இளம் காவலர்'... 'சாலையில் திரும்பும்போது கண்முன்னே வந்த பயங்கரம்'... சென்னையில் நடந்த கோரம்!
- கம்பம் அரசு மருத்துவமனையில் ‘4 நாளில் 40 பிரசவங்கள்’ பார்க்கப்பட்டது.. மருத்துவ அலுவலர் தகவல்..!
- 'பிணவறையில் அழுகிய உடல்'... 'சுவிட்ச்சை ஆன் செய்ய மறந்த ஊழியர்'... காத்திருந்த அதிர்ச்சி!
- ‘இனி சென்னை மக்கள் காய்கறி இங்கே போய்தான் வாங்கணும்’.. தற்காலிகமாக இடம் மாறும் கோயம்பேடு மார்கெட்..!
- 'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- சென்னை கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிக மூடல்!.. மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று உறுதி!.. என்ன காரணம்?.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!
- சென்னை ஆவின் ‘பால்பண்ணை’ ஊழியர்கள் 2 பேருக்கு ‘கொரோனா’ தொற்று..! வெளியான அதிர்ச்சி தகவல்..!