"உதவிக்கு அழைச்சப்போ யாரும் வர்ல.. சுத்தி நின்னு செல்போன்ல வீடியோ தான் எடுத்தாங்க!".. கோயம்பேடு கூலி தொழிலாளரை காப்பாற்றிய பெண் காவலர் பகிர்ந்த அனுபவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்றுமுன் தினம் (21.10.2020), பெண் காவலர் முத்து கிருஷ்ணவேணி, கோயம்பேட்டில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றினார்.  வில்லிவாக்கம் வி 1 ஸ்டேஷனில் காவலராக பணிபுரியும் முத்து கிருஷ்ணவேணி, கோயம்பேடு மார்க்கெட் சென்றிருந்தபோது  அங்கு சுமை தூக்கிக் கொண்டு வந்த தொழிலாளி வலிப்பு வந்து வாயெல்லாம் நுரைதள்ளி, விழுந்து துடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அவருக்கு முதலுதவி செய்துகொண்டே முத்து கிருஷ்ணவேணி , அருகில் இருந்தவர்களிடம், உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அப்போது,  “மார்க்கெட்டுக்கு வந்தவர்கள் சுற்றி நின்று செல்போன்களில் வீடியோ எடுத்தாங்களே தவிர, அந்த மனுஷனுக்கு உதவி செய்றதுக்கு யாருமே முன் வரல” என்று முத்து கிருஷ்ணவேணி குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்குவந்த மருத்துவப் பணியாளர்கள் அந்தக் கூலித் தொழிலாளியைப் பரிசோதித்துவிட்டு, காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளார். முனதாக உயிருடன் இருந்த அந்த சுமை தூக்கும் தொழிலாளரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார் முத்து கிருஷ்ணவேணி

இதுபற்றி பேசிய முத்து கிருஷ்ணவேணி, “முதலுதவி செய்றதுக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்ல  சொல்லி கொடுத்துருக்காங்க. அதனால, ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் சுமார் முக்கால் மணி நேரம், `உங்களுக்கு ஒண்ணுமில்ல, என சொல்லிக்கொண்டே, அவரை சற்றே துடிப்புடன் வெச்சுருந்தேன். சற்றே நினைவு வந்ததும் டீ வாங்கிக்கொடுத்து குடிக்க வெச்சேன். பிறகு ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பினேன்.

ஆனா அந்த நேரத்துல அந்தத் தொழிலாளி அழுக்கா இருந்தார்னு யாரும் அவரை தொட்டுத் தூக்க முன்வரல. அதுதான் மனசுக்கு வருத்தம்.. என் உடலில் பலு இருந்ததால், தனி ஆளா ஓர் ஆம்பளையைத் தூக்கிக் கோணியில போட்டு முதலுதவி கொடுக்க முடிஞ்சது. அந்தத் தொழிலாளி பேரு லட்சுமணன். இப்ப நல்லாருக்காரு.  மனசுக்கு நிறைவா இருக்கு. மக்களோட வரிப்பணத்துல சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். அந்த மக்கள்ல ஒருத்தரின் உயிருக்கு ஆபத்துன்னா நாமதான் முன்வரணும்” என்று ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலியை அடுத்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்து கிருஷ்ணவேணி காவல்துறை மேல் தீராத விருப்பத்தால், திருமணத்துக்குப் பிறகும் விடாமல் முயற்சி செய்து, 2005 பேட்சில் தேர்வானார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்