'குர்தா 800 ரூபாதானா?'.. ஆர்டர் செய்ததும் 'அம்பேல்' ஆன 80,000 ரூபாய்!.. அதிர்ந்துபோன இளம் பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெங்களூருவில் இளம் பெண் ஒருவர் 800 ரூபாய்க்கு ஆன்லைனில் குர்தா ஆர்டர் செய்யப் போய், 80 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்களிடம் பறிகொடுத்த அவலம் நிகழ்ந்தேறியுள்ளது.
ஆம், பெங்களூருவைச் சேர்ந்த ஷ்ரவனா என்கிற பெண் இணையத்தில் இ-காமர்ஸ் என்கிற ஆப்பினை டவுன்லோடு செய்துள்ளார். அதில் தனக்கு விருப்பமான குர்தா ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அதற்காக 800 ரூபாய் பணமும் செலுத்தியிருக்கிறார். ஆனால் அந்த பணம்தான் தனது அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆனதே தவிர, குர்தா ஆர்டர் செய்ததற்கான தகவல் எதுவுமே வரவில்லை.
இதனையடுத்து செயலியில் கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பருக்கு போன் செய்து ஷ்ரவனா கேட்டுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய அந்த மர்ம நபர், ஷ்ரவனாவுக்கு உதவி செய்வது போல், நேர்மையாக பேசி, ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வங்கி விபரங்களை கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணும் வெகுளியாக எல்லாவற்றையும் கூற, அந்த நபரோ, அப்பெண்ணின் போனுக்கு ஒரு ஓடிபி வந்துள்ளதாகவும் அதை அப்படியே சொல்லுமாறும் கேட்டுள்ளார்.
அவரை நம்பி ஓடிபி நம்பரை கொடுத்துள்ளார் அந்த பெண். அவ்வளவுதான் உடனே அந்த பெண்ணின் கணக்கில் இருந்து 79 ஆயிரத்து 600 ரூபாய் காணாமல் போனது. பதறி அடித்துக்கொண்டு அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதோடு, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டும் செயலிகளை டவுன்லோடு செய்யுங்கள் என்றும், போனில் இருக்கும் play protect ஆப்ஷனை Enable செய்யுங்கள் என்றும் பொடுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
‘சொத்து சேர்க்கல’... ‘4 பிள்ளைகள் இருந்தும்’... ‘வயதான தாயை’... ‘வீதியில் கொண்டுபோய் விட்ட கொடூரம்’!
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
- 'உங்க ATM கார்டை புதுப்பிக்கணும்.. OTP நம்பரை சொல்லுங்கே!'.. 'போலீஸ்காரரையே ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் அபேஸ்!'.. பரபரப்பு சம்பவம்!
- ‘ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை’... ‘பிரித்துப் பார்த்த வாடிக்கையாளருக்கு’... ‘காத்திருந்த அதிர்ச்சி’!
- ‘நடிகர் விஜய்சேதுபதிக்கு’... ‘எதிரான வணிகர்கள் போராட்டம்’... ‘மண்டி ஆன்லைன் நிறுவனம் விளக்கம்’!
- ‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..
- ‘இவங்கள பத்தி எல்லாம் ஆன்லைன்ல தேடிப் பாக்கறவங்களா நீங்க?’.. ‘அப்போ ரொம்ப உஷார்’..
- 'கிரெடிட் கார்டு மோசடி மட்டுமில்ல'.. 'சினிமா ஆசையில் வரும் இளம் பெண்களை..'.. அதிரவைக்கும் சம்பவம்!
- ‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..
- 'என்னமா இப்படி செஞ்சுட்ட.. கடைசியில நீ ஜெயிலுக்கு போக நானே காரணமாயிட்டேனே?' உருகிய தந்தை!