‘சுடுதண்ணீர் வைத்து தர மறுப்பு’... ‘மனைவிக்கு 75 வயது கணவரால் நிகழ்ந்த பயங்கரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சங்கரன்கோவில் அருகே சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த 2-வது மனைவியை தூங்கி கொண்டிருக்கும்போது, 75 வயது முதியவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி வடக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (75) மரம் வெட்டும் தொழில் செய்த வருகிறார். இவரது முதல் மனைவி ஆவுடையம்மாள் பிரிந்து சென்று அதே ஊரில் ஆடு மேய்த்து பிழைத்து வருகிறார். இதையடுத்து சீதாலட்சுமி (57) என்பவரை இரண்டாவதாக பொன்னுசாமி திருமணம் செய்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், உடல்நலம் குன்றிய பொன்னுசாமி, தனக்கு பணிவிடை செய்யுமாறு கூறி வந்துள்ளார்.
ஆனால் சீதாலட்சுமியோ தனக்கு சொத்து எழுதித் தருமாறு கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதற்கிடையில், சுடுதண்ணீர் வைத்து தருமாறு மனைவியிடம் பொன்னுசாமி கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரத்தில் இருந்த பொன்னுசாமி தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விறகு வெட்டும் கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சீதாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீதாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொன்னுச்சாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கதறி துடிச்சாங்க'... '85 வயது பாட்டிக்கு நடந்த சொல்லெண்ணா கொடூரம்'...குலைநடுங்க செய்யும் சம்பவம்!
- 'தங்கச்சிய' லவ் பண்ணேன்... என்ன 'கல்யாணம்' பண்ணிக்கன்னு டார்ச்சர் பண்ணா அதான்... 'கடலூரில்' இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
- மாநிலத்தையே ‘உலுக்கிய’ 6 கொலைகள்... கைதான ‘சயனைடு’ கில்லர் ‘ஜோலி’ சிறையில் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- ‘தலை தனியே.. உடல் தனியே’.. நாயால் வெளிச்சத்துக்கு வந்த சடலம்..சேலத்தை நடுங்கவைத்த சம்பவம்!
- ‘ராங் நம்பர்’ மூலம் அறிமுகமான இளைஞர்.. கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!
- ‘வீட்டு வாசலில்’... ‘தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி’... ‘இளைஞர்களால் நடந்த பயங்கரம்’... ‘2 ஆண்டுகள் கழித்து தெரியவந்த அதிர்ச்சி’!
- 'வீட்டுக்கு போய் கொண்டிருந்தவரை வழிமறித்து...' பத்து பேர் சுற்றி நின்று, அரிவாள், கத்தி, கம்பு, கடப்பாரையுடன்... கொடூரமான சம்பவம்...!
- ‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..!
- ‘மனைவியை கொலை பண்ணிட்டேன்’.. ‘நானும் தற்கொலை பண்ணப்போறேன்’.. மாமனாரை மிரளவைத்த ‘போன்கால்’!
- 'உங்க சபலத்துக்காக குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க'... 'டாக்டர் மனைவி கொலை'... அதிரவைக்கும் திருப்பம்!