‘முன்னாடியே அப்படி பண்ணியும்’.. நம்பி விட்ட குழந்தைகளை.. ‘தாய் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலியில் தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே வசித்து வரும் மைக்கேல் என்பவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சக்தி அனுசுயா (5) என்ற மகளும், துரைசிங் (4) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென மாரியம்மாள் தலையணையை குழந்தைகளின் முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் சக்தி அனுசுயா சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைசிங் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே 2 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாகக் கருதி மாரியம்மாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து 3 பேரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் ஏற்கெனவே மாரியம்மாள் தனது ஒரு வயது பெண் குழந்தை ஒன்றுக்கு எறும்புப் பொடி கலந்த உணவை ஊட்டியதும், அதனால் அந்தக் குழந்தை இறந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் மாரியம்மாளுக்கு மனநிலை சரியில்லாமல் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனநிலை பாதித்ததால் இந்தக் கொலைகளை அவர் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எனக்கு தர மாட்டீன்னா.. நீ இருக்கவே வேணாம்'.. அக்காவுக்கு தம்பி கொடுத்த கொடூர தண்டனை!
- ‘நம்பி வந்த மனைவிக்கு..’ சாலையிலேயே நடந்த பயங்கரம்.. கணவரின் செயலால்.. ‘அச்சத்தில் உறைந்து போன தெரு மக்கள்..’
- ‘போர்வையில் சுற்றிக் கிடந்த தாயின் உடல்’.. ‘அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர்’.. ‘மகன் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- 'நெஞ்சோடு அணைத்தப்படி'... 'நிலச்சரிவின் கோரப்பிடியில்'... 'உருக வைக்கும் சம்பவம்'!
- 'மணமாகி 30 நாளில் கணவரை தீர்த்துகட்டிய நர்ஸ்'.. 3 வருடம் கழித்து .. 'மர்ம மரணம்'.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!
- சாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..
- ‘போதை தலைக்கேறினதும்..’ கல்லால் அடிச்சு.. ‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. மனைவி செய்த கொடூரம்..
- 'திருவிழாவுக்கு ஊருக்கு வந்த அண்ணனை'... 'ஆத்திரத்தில் தம்பி செய்த பகீர் காரியம்’... ‘பதறிப்போன மனைவி'!
- ‘கம்ப்ளைண்டா குடுக்குற..?’ கணவரின் உறவினர்களால்.. ‘இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’!
- 'ரூம்க்கு வரல.. வேற ரூம்ல தூங்கியிருப்பான்னு நெனச்சனே!.. 3-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்!