அம்மாவை பார்க்கச் சென்ற இளம் பெண்... மர்மநபர்களால் நடந்த பயங்கரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை கடத்திய மர்மநபர்கள், 2 நாட்களாக சித்ரவதை செய்து வீட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - வசந்தா தம்பதி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா, திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் 4 மகள்களில் ஒருவரான கலைச்செல்வியை, திருப்பூரில் உள்ள தாய் வசந்தா வீட்டுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுவிட்டு, 2 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது, கலைச்செல்வியை மர்மநபர்கள் சிலர் கடத்திச்சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச்சென்றதாகவும் தெரிகிறது. கண் திறக்க முடியாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட கலைச்செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடன்குடி - காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, தன்னை மர்ம நபர்கள் சிலர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கதறி அழுதார்.

இதுகுறித்து குலசேகரம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது? மர்மநபர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

WOMAN, YOUNG, THOOTHUGUDI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்