‘ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் கதவு விழுந்து’... 'முதிய பெண்மணிக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரயில் பயணத்தின்போது, முதிய பெண்மணி ஒருவருக்கு, எமர்ஜென்சி ஜன்னல் விழுந்து காயம் ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் நளாயினி (65). இவர் கடந்த திங்கள்கிழமையன்று, மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார். என்ஜினை அடுத்து இருக்கும் முன்பதிவு செய்யப்படாத (unreserved) பெட்டியின் ஜன்னல் (Emergency exit) இருக்கையில், அமர்ந்து நளாயினி பயணம் செய்து வந்தார். ரயில் பேரளம் தாண்டி சென்றபோது, எதிர்பாராத விதமாக அவருக்கு அருகே இருந்த இரும்பு ஜன்னல் கீழே விழுந்தது.

இதில் நளாயினியின், இடது கை விரல்களில் காயம் ஏற்பட்டதால், அதிலிருந்து ரத்தம் அதிகளவு வெளியே வர ஆரம்பித்தது. இதனிடையே, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையின் உதவியுடன், செவிலியர்கள், காயம்பட்ட நளாயினிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். இதனால் ரயில் புறப்படுவது தாமதமானதால், அதற்குள் அங்கு கூடிய பயணிகள், தரமான கதவுகள் இல்லாதது குறித்து, ரயில்நிலைய ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், முதலுதவி சிகிச்சை செய்வதில், ரயில்நிலைய ஊழியர்கள் கவனமாக இருந்தனர். காயம் ஏற்பட்டதும், உடனடியாக பயணியின் நலன் தான் முக்கியம் என்று கருதி, வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பணியாற்றிய ஊழியர்களுக்கு, பாராட்டுக்கள் குவிந்தன.

TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்