‘விரட்டிய மக்கள்’.. மனநலம் பாதித்தவரின் மானம் காத்த தேவதை.. குவியும் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒட்டு துணி இல்லாமல் சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பெண் ஒருவர் ஆடை அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான நந்தினி, நெல்லை-மதுரை நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கங்கைகொண்டான் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் உடலில் ஒட்டுத்துணி இன்றி நடந்து சென்றுள்ளார். அப்போது ஆண் சிலர் அவரை விரட்டி விட்டுள்ளனர்.
இதைப் பார்த்த நந்தினி, உடனே தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சால்வையை எடுத்து சென்று, அவரது இடுப்பில் கட்டி விட்டார். மேலும் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவு வாங்கி வந்து அவருக்கு ஊட்டியும் விட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களே கைவிடும் இந்த காலகட்டத்தில், ஒட்டுத்துணி இல்லாமல் சாலையில் திரிந்தவருக்கு சால்வையை கட்டிவிட்டு, உணவும் வாங்கிக் கொடுத்த நந்தினிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்களால் தான் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பாயாசத்தில் மயக்க மருந்து’.. கோயிலில் சாமி கும்பிடும்போது ஏற்பட்ட பழக்கம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- ‘10 வருச பழக்கம்’.. ஆணாக மாறிய பெண்ணை ‘கல்யாணம்’ செய்த இளம்பெண்.. அதிர்ச்சியில் பெற்றோர்..!
- 3 மாசத்துக்கு முன்னாடி தான் பழக்கம்.. கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சென்னை பெண்.. காதல் ஸ்டார்ட் ஆனது எப்படி தெரியுமா..?
- எல்லை தாண்டிய காதல்... பெண்ணை நேரில் பார்க்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்.. நடந்த ட்விஸ்ட்
- நைட் 1 மணி.. ‘ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பெண்’.. யாருங்க இவங்க..? வைரலாகும் போட்டோ..!
- அப்போ உள்ள போற 'தண்ணி' எல்லாம் எங்க போகுது...? 'இப்படி' ஒரு கிணறா...? - ஆச்சரியத்தில் பொதுமக்கள்...!
- 'உன் போக்கே சரியில்ல!.. உண்மைய சொல்லு யார் நீ'?.. மர்ம பெண்ணை மடக்கிப் பிடித்த ஜெர்மனி அரசு!.. விசாரணையில் பகீர் திருப்பம்!
- 'காவல்துறையில் கம்பீரமாக பணிபுரிந்த ஆப்கான் பெண்!.. வேலைக்கு போன குற்றத்திற்காக... ஈவு இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரச் செயல்'!
- ஒரு 'ரகசியத்த' சொல்ல போறோம்...! 'யாருக்கிட்டேயும் சொல்லிராதீங்க...' 'நாங்க வேலை செஞ்சிட்டு இருந்தப்போ மண்ணுக்கடியில இருந்து...' - அதிர்ச்சியில் உறைந்த பெண்...!
- ‘கல்யாணமான பெண்ணுக்கு காதல் கடிதம்’.. மளிகைக் கடைக்காரர் மீது வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தண்டனை..!