Divya IPS .. "உனக்கு எதுக்குமா இந்த வேலன்னு தான் எல்லாரும் கேட்டாங்க.. ஆனா இன்னைக்கி" டெல்லி சென்று கர்ஜித்த தமிழ் சிங்கப் பெண்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற மீண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

பொதுவாக, ஒருவரின் வாழ்க்கையில் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு, ஏதேனும் லட்சியம் அல்லது கனவுடன் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வார்கள்.

அப்படி, அடுத்த கட்டத்திற்கு நகரும் பெரும்பாலான இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய கனவாகவும், லட்சியமாகவும் இருப்பது ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி ஆவது என்பது தான். இதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயார் ஆவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

லட்சிய பாதை

பணியின் பொறுப்பு எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு அதில் தேர்ச்சி பெறுவதும் கடினமாக தான் இருக்கும். மிகவும் பொறுப்புணர்வுடன், அதே வேளையில் மிகவும் கடின உழைப்புடன் இதற்கு தயாராக வேண்டும். அத்துடன் மட்டுமில்லாமல், ஒரே அட்டம்ப்ட்டில் தேர்ச்சி பெறுவது என்பதும் சாதாரண காரியமல்ல. நமது தொடர் முயற்சிகளால், தோற்றாலும் துவண்டு போகாமல், லட்சியத்திற்கான பாதையில் முன்னேறி, நம் கனவுகளை அடைய வேண்டும்.

தடைகளை உடைத்து சாதித்த இளம்பெண்

அப்படி, தனது வெற்றிக்கான பாதையில், தன் முன்னால் நின்ற தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து சாதனை புரிந்த இளம்பெண் பற்றி நாம் காண்போம். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண், தற்போது ஐபிஎஸ் அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி

புதுடெல்லி மாநிலம், வடமேற்கு மாவட்டத்தின் சுபாஷ் பிளேஸ் சப் டிவிஷனில் தற்போது ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். ஒரே ஒரு தேர்வில் வெற்றி பெற்று, இன்று ஐபிஎஸ் அதிகாரியாக திவ்யா நியமிக்கப்படவில்லை. தன்னுடைய விடாமுயற்சியால், நான்காவது அட்டம்ப்ட்டில், இந்திய அளவில் 560 ஆவது ரேங்க் பெற்று, தனது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.

வேண்டாத வேலை

'நான் ஐபிஎஸ் தேர்விற்கு வேண்டி, தயாராக ஆரம்பித்த சமயத்தில், பலரும் ஒரு பெண்ணாக உனக்கு இது வேண்டாத வேலை என்று தான் கூறினார்கள். ஆனால், நான் தொடர்ந்து எனது முயற்சிகளை நிறுத்திக் கொள்ளாமல், அதில் கடினமாக உழைத்து வெற்றியும் பெற்றுள்ளேன்' என சிவில் சர்வீஸ் தேர்ச்சி ஆன சமயத்தில் திவ்யா தெரிவித்திருந்தார்.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. நகை வாங்குவோர் திகைப்பு

மேலும், திவ்யாவின் தந்தை எஸ்.ஐ ஆக பணிபுரிந்து வந்த நிலையில், தந்தையை போலவே தானும் ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக ஐபிஎஸ் பாதையை தேர்வு செய்துள்ளார்.

பெண்களுக்கு முன்னுதாரணம்

தொடர் தோல்வியும் துவண்டு போகாமல், வெற்றி வரை கடினமாக உழைத்த திவ்யாவின் அர்ப்பணிப்பு, இன்று பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், எத்தனை தடைகள் வந்தாலும் தங்களுடைய கனவை அடைய தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதனையும், எடுத்துரைக்கிறது.

வெறும் 4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. கண்ணீரில் சொமேட்டோ முதலீட்டாளர்கள்

மேலும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, இன்று ஐபிஎஸ் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ள திவ்யாவிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

WOMAN FROM TAMILNADU PASSED IN CIVIL SERVICE EXAM, DIVYA IPS, தமிழ் சிங்கப் பெண்

மற்ற செய்திகள்