போனை எடுக்காததால் வீட்டுக்கு போன அப்பா.. இளம் பெண் மருத்துவரின் விபரீத முடிவு.. பெரம்பலூரில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெரம்பலூரில் பெண் மருத்துவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

மருத்துவர்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகள் பிரியங்கா. 28 வயதான பிரியங்கா மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் பெரம்பலூர் கல்யாண் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்திருக்கிறார் பிரியங்கா. விடுமுறை நாட்களில் தனது பெற்றோரை காண பிரியங்கா செல்வது வாடிக்கை.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பிரியங்கா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பிய அவர் தனது தந்தையிடம் போன் பேசியிருக்கிறார். அதன் பிறகு அவரது சகோதரர் அழைத்தபோது ப்ரியங்கா போனை எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தபோதும் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த தந்தை ராஜசேகர் மற்றும் பிரியங்காவின் சகோதரர் உடனடியாக கிளம்பி அவரை காண சென்றிருக்கின்றனர்.

அதிர்ச்சி

அப்போது, பிரியங்கா தங்கியிருந்த வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்திருக்கிறது. இதனையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது பிரியங்கா தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

உடனடியக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். கடந்த வாரம் பிரியங்கா தனது பெற்றோரை காண சென்றிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

DOCTOR, PERAMBALUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்