‘சுற்றி பார்க்க வந்தபோது’... 'நொடியில் 100 அடி பள்ளத்தில்'... 'வேன் கவிழ்ந்து நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடைக்கானல் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து, பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 21 பேர், வேன் ஒன்றில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். உதகை, மதுரை போன்ற இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு, இன்று காலை கொடைக்கானல் வந்தனர். அங்கு பல்வேறு பகுதிகளைப் பார்த்துவிட்டு, மாலை 4 மணிக்கு பழநிக்கு சென்றுகொண்டிருந்தனர். பழநி - கொடைக்கானல் மலைப்பாதையில், வட்டமலை அருகே வேன் வந்துகொண்டிருந்தது.

அப்போது, 2-வது கொண்டை ஊசி வளைவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில், தலைகீழாக கவிழ்ந்தது. 2 மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டதால், அதனை தாண்டி வேன் விழவில்லை. இதனால் வேனில் இருந்தவர்கள் அலறித்துடித்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் அபிஷேக் காந்தி என்பவரின் மனைவி தேவிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த மற்றவர்களை, பள்ளத்திலிருந்து கயிறு கட்டி, அதன்மூலம் பயணிகளை, போலீசார் மீட்டனர். அதிலும் 6 வயதுக் குழந்தை இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது. 4 மணி நேரம் போராடி அந்தக் குழந்தையை, பத்திரமாக அங்கிருந்தவர்கள் மீட்டனர். காயமடைந்தவர்கள், பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வளைவில் வேனின் ஓட்டுநர் கண் அசந்ததன் காரணமாக, வேன் திசைமாறி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ACCIDENT, DIED, KODAIKANAL, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்