'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில், திருமணம் நடைபெற இருந்தநிலையில், கிணற்றுக்குள் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரைச் சேர்ந்தவர் அப்பு (24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவருக்கும், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும், இவரது உறவினரான பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த ஸ்டெஃபி என்கின்ற மெர்சிக்கும் (22), வரும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்தவாரம்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், இவர்கள் இருவரும், வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள், கண்டிகை கிராமத்தில் உள்ள, ஒரு விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது கால் தவறி, கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில், மோதிய மெர்சி கிணற்று நீரில் மூழ்கினார். அவரை பிடிக்கச் சென்றபோது அப்புவும் கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் இருந்து இருவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அங்கே வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்த சடகோபன் என்ற விவசாயி, இருவரையும் காப்பாற்ற முயற்சித்தார்.
ஆனால் பெரும் பேராட்டத்திற்குப் பின்னர் அப்புவை மட்டும் காப்பற்றி, பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த ஆவடி தீயணைப்பு படையினர், சுமார் 1 மணி நேரம் போராடி, மெர்சியின் உடலை மீட்டனர். இந்நிலையில், செல்ஃபி எடுக்க சென்றதால், மெர்சி தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டநிலையில், காப்பாற்றப்பட்ட அப்பு, இதுகுறித்து ‘இதழ்’ ஒன்றுக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.
அதில், 'கிணற்றுக்குள் உள்ள படியில் இறங்கி, தண்ணீரில் கால் வைக்க மெர்சி ஆசைப்பட்டதால், கிணற்றுக்குள் இறங்கியபோது, மெர்சி படியில் தவறி விழ, அவரை காப்பாற்றப் போய், இருவரும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தோம்' என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை..! பதற வைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா?’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
- ‘சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலியான சம்பவம்’! இரண்டு பேரை கைது செய்த போலீசார்..!
- ‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..! சென்னையில் பரபரப்பு..!
- ‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..
- ‘சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதி’.. ‘18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’..
- ‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘தூக்க கலக்கம்’... ‘லாரி மீது மோதிய அரசுப் பேருந்து’... ‘அலறிய பயணிகள்’... '15 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘சென்னையிலிருந்து கோவைக்கு’... 'காரில் திரும்பியபோது'... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- ‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!