'உஸ்ஸ் வாய மூடு'... 'எம்.எல்.ஏ பையனை லெப்ட், ரைட் வாங்கிய பெண் காவலர்'... ஆனால் எதிர்பாராமல் நடந்த திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு விதிகளை மீறி காரில் சுற்றிய எம்.எல்.ஏ வின் மகனை பெண் காவலர் ஒருவர் மடக்கி விசாரித்தார். ஆனால் இறுதியில் நடந்த எதிர்பாராத திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சரும், எம்.எல்.ஏவுமான குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி. கடந்த புதன்கிழமை ஊரடங்கு விதிகளை மீறி, தனது நண்பர்களுடன் காரில் வெகு நேரமாகச் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுனிதா யாதவ் என்ற பெண் காவலர் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அப்போது பிரகாஷ் கனானி, தான் அமைச்சரின் மகன் என்று காட்டமாகப் பேசியுள்ளார். பெண் காவலர் சுனிதா, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். எம்.எல்.ஏ மகன் என்றால் கொரோனா வராதா. ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது குற்றம் என கூறியுள்ளார். இதையடுத்து பிரகாஷ் கனானி, அவரது தந்தையைத் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களைக் கூறி அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பிரகாஷ் கனானி பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் பெண் காவலரை மிரட்டும் தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்குச் சற்றும் பயப்படாத பெண் காவலர் சுனிதா, நான் உங்களின் அடிமை இல்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுனிதா காவல் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

பிரகாஷ் கனானியும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே பெண் காவலர் சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்