கிணற்றுக்குள் மிதந்த.. ‘சாக்குப்பையில் இருந்த பெண் சடலம்..’ அதிர வைக்கும் காரணம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் காணாமல் போன பெண் மதுராந்தகம் அருகே சாக்குப்பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பவரைக் கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லையென போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மதுராந்தகம் அருகே ஒரு விவசாயக் கிணற்றிலிருந்து மேரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்தவர்கள் உடலை சாக்குப்பையில் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கந்துவட்டி தொழில் செய்துவந்த மேரி அதன் காரணமாகவே கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி தேவி, அதே பகுதியில் வசிக்கும் வள்ளி, முத்தையா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேரியிடம் கடனாகப் பணம் வாங்கியிருந்த வள்ளி மற்றும் மணிகண்டன் அதைச் சரியாகத் திருப்பித் தராமல் இருந்துள்ளனர். பணத்தைக் கேட்ட மேரியை வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்தவருடன் வாக்குவாதம் ஏற்பட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சரவணபவன் ஹோட்டல் அதிபர் காலமானார்..! கொலை குற்ற வழக்கு தீர்ப்பு தான் காரணமா..?
- ‘ஃபேஸ்புக் மூலம் பழகி, ஏமாற்றிய இளைஞர்’... ‘காதலியின் தந்தை செய்த அதிர்ச்சி காரியம்'!
- 'பேருந்தை முந்த முயன்ற பைக்'... 'சென்னை'யில் நடந்த கோர விபத்து'... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- பூசாரி உட்பட 3 பேருக்கு.. ‘கோயிலுக்குள் நடந்த பயங்கரம்..’ மிரள வைக்கும் காரணம்..
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய மர்ம நபர்..! அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்..!
- ‘மாநகரப் பேருந்தின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனம் ’... ‘சென்னையில் 2 இளம் பெண்கள் பலி’... வீடியோ!
- ரயிலில் தூக்க கலக்கத்துடன்.. ‘கழிவறைக்குச் செல்ல வந்த பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’
- ‘சென்னைக்கு மழை இருக்கா?’... 'தமிழ்நாடு வெதர்மேனின் பதில் இதுதான்'!
- 'முக்கிய பொறுப்பில் தமிழக திருநங்கை'... 'உணவு நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்'!
- '1 கோடி லிட்டருப்பு'.. இனியாச்சும் தீருமா? சென்னையின் தண்ணீர் தேவை? தொடங்கிய குடிநீர் ரயில் சேவை!