‘அப்போ உனக்கு உன் புருஷன்தான் முக்கியம்..?’ தவறான நட்பால்.. ‘பெண்ணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் பெண்ணைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

‘அப்போ உனக்கு உன் புருஷன்தான் முக்கியம்..?’ தவறான நட்பால்.. ‘பெண்ணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’

திருச்சியைச் சேர்ந்த உமாசத்யா என்பவர் ஏர்போர்ட் அருகே டிபன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அங்கு அடிக்கடி வாடிக்கையாளராக வரும் சண்முகம் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த உமாசத்யாவின் கணவர் மாரிமுத்து அவரைக் கண்டித்துள்ளார். இதனால் உமாதேவியும் சண்முகத்துடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமாசத்யா கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சண்முகம், “உனக்கு உன் புருஷன் தான் முக்கியமா? என்னை மறந்துவிட்டு நீ நிம்மதியா வாழுறியா? உன்ன உயிரோட விட மாட்டேன்” என அவருடன் சண்டை போட்டுள்ளார்.

பின்னர் சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமாசத்யாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உமாசத்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய சண்முகத்தைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TRICHY, HUSBANDANDWIFE, AUTO, DRIVER, WOMAN, BRUTALMURDER, LOVEAFFAIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்