'தாயைத் தேடி பயணம்!'... 3 வயதில் தத்துகொடுக்கப்பட்டவர்... 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில்!... அசரவைக்கும் உண்மை சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

3 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு தத்துகொடுக்கப்பட்டவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாயை தமிழ்நாட்டில் தேடி வருகிறார்.

சென்னை மணப்பாக்கத்தில் கிறிஸ்ட் ஃபெய்த் என்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் இயங்கிவருகிறது. இந்த காப்பகத்தில் 1989-ல் பிறந்த பெண் குழந்தையான லக்ஷ்மியை அவரது தாய் விட்டுவிட்டு சென்று விட்டார்.

1992-ல் அண்ணாநகரில் உள்ள மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற நிறுவனம் மூலம் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா நாட்டிற்கு ராய்ஜான்சன், ஹெலன்  தம்பதிகளால் தத்துகொடுக்கப்ட்டார் லக்ஷ்மி.

இந்நிலையில் தற்போது 31-வயதான லஷ்மி, லஷ்மிகாஸ்மோரா என்ற பெயரில் ஆஸ்ரேலியா மெல்பர்ன் நகரில் அரசு நூலகம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

இதன் இடையே 23 நாட்கள் சுற்றுலா வந்துள்ள லக்ஷ்மி  இந்திய நாட்டிற்கு தான் பிறந்த இடத்தினை காணவும் தனது சொந்த பெற்றோர்களைப் பார்க்கவும் தற்போது தனது தத்து தந்தையின் நண்பர்களான டேவிட், எலிசபெத் தம்பதிகள்  உதவியுடன் இந்தியாவில் தொடர்பு கொண்டு மணப்பாக்கத்திற்கு வந்துள்ளார்.

லக்ஷ்மியின் பெற்றோரைக் கண்டு பிடிப்பதற்காக உதவி செய்துவரும் சிபிஐ  ஓய்வு அதிகாரி ரகோத்தமன் இதுபற்றி கூறுகையில், லட்சுமியின் உண்மையான தாய் ஜோதி. பொன்னேரி பகுதியிலுள்ள பொன்ஜெட்டி கிராமத்தில் வசித்து வந்தார். லக்ஷ்மியின் உண்மையான தாய் உயிரோடு இருந்தால், இந்த செய்தியை படிக்கும் அப்பகுதி மக்கள் தன்னை தொடர்பு கொண்டு தகவல் ஏதேனும் இருந்தால்  அலைப்பேசி எண்ணுக்கு (9841063892) அழைத்து தகவல் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் 28 வருடங்களாக ஆஸ்திரேலியாவிலிருந்து விட்டு தன் தாயை பார்க்க வேண்டும் என்று இந்தியா வந்துள்ள அவருக்கு நாம் இங்கு உதவி செய்ய வேண்டும் என்பதே நமது கலாச்சாரமும் பண்பாடும் கூட என்று தெரிவித்தார்.

 

MOM, DAUGHTER, SEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்