'புது டிரஸ்க்கு பணமில்லயா?'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூரை அடுத்த திருமுல்லைவாயலில் பானுபிரசாத் -மம்தா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். வடமாநிலத்தவர்களான இவர்கள் அம்பத்தூரில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளனர். குறைவான வருமானத்துடனும் நிறைய வறுமையுடனும் குடும்பம் நடத்தி வந்த இந்த தம்பதியர்க்கு ராஜ் என்கிற சிறுவயது மகன் இருந்துள்ளான்.

ராஜ்க்கு பிறந்த நாள் வந்ததும், அவனுக்கு புது டிரஸ் எடுத்துத் தரச் சொல்லி கணவரிடம் மம்தா கேட்டதற்கு, கஷ்டத்தில் இருந்த கணவர், புத்தாடை வாங்க பணமில்லை, ஆதலால் பழைய டிரஸ் போட்டு பிறந்த நாளை கொண்டாடுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த மம்தா, ‘பிறந்த நாளுக்கு ஒரு புது டிரஸ் எடுத்து தர முடியாத உங்களுக்கு எதுக்கு மனைவி,குழந்தை’ என்று கணவரிடம் பேசியுள்ளார்.

ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பானுபிரசாத் வழக்கம் போல் பானிபூரி விற்பதற்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பி வந்தபோதுதான் கழுத்தறுத்துக்கொண்டு மனைவியும் மகன் ராஜூம் ரத்த வெள்ளத்தில் மிதந்திருந்ததைக் கண்டு அலறியுள்ளார். பிறகு அக்கம் பக்கத்தின் உதவியுடனும் ஆம்புலன்ஸின் உதவியுடனும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பானுபிரசாத்தின் மகனுக்கும் மனைவிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திக்காரர்கள் என்பதால் பொதுவாக அக்கம் பக்கத்தினருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாத பானுபிரசாத்தின் குடும்பம் பற்றி விசாரித்த போலீஸார், மகனின் பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்கித் தராத கணவர் மீதான ஆத்திரத்தில் மனைவி மம்தா, பெற்ற மகனை முதலிலும், பின்னர் தன்னையும் காய்கறி அரியும் அரிவாளால் அறுத்துக்கொண்டதாகவும், மம்தா தற்போது பேச முடியாத சூழலில் சிகிச்சை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர். வறுமையில் வாடும் குடும்ப சூழலை உணந்து மகனை தேற்றியிருக்க வேண்டிய மம்தா, கணவரின் மீதான ஆத்திரத்தை குழந்தை மீது காண்பித்திருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

SUICIDEATTEMPT, CHENNAI, BIRTHDAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்