ஒன்றரை பவுன் நகைக்காக நடந்த கொடுமை.. பீரோவில் துணியால் சுற்றி கிடந்த உடல்.. பெண் பரபரப்பு வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி: குளச்சல் பகுதியில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைதான நிலையில், உடந்தையாக இருந்த அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பாத்திமா தெருவைச் சேர்ந்த ஜான் ரிச்சர்டு - சகாய சில்ஜா தம்பதி. இவர்களது 4 வயது மகன் ஜோகன் ரெஜி கடந்த 21ம் தேதி மாயமானான். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின்படி போலீசார் அதே தெருவைச் சேர்ந்த பாத்திமா (35) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், ஒன்றரை பவுன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து, நகையை திருடி உடலை பீரோவில் மறைத்து வைத்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாத்திமா கைது செய்யப்பட்டார்.
பாத்திமா வாக்குமூலம்
பாத்திமாவிடம் நடத்திய விசாரணையில், கணவர் ஷரோபின் மீன்பிடி தொழில் செய்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரின் சம்பாத்யத்தில் போதிய வருமானம் இல்லாததால் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதன்படி, வாணியக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த கடன் ரூ.60 ஆயிரத்தை திருப்பி தருமாறு பாத்திமாவிடம் கேட்டுள்ளார். 21ம் தேதிக்குள் கடனை திருப்பி தரவில்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பணம் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்த பாத்திமா, அன்று மதியம் 4 வயது சிறுவன் ஜோகன் ரெஜி தெருவில் விளையாடியதை பார்த்து வீட்டு மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு அவனது கழுத்தில் இருந்த செயினை அறுக்க முயன்றபோது கத்தி கூச்சல் போட்டதால், துணியால் வாயை கட்டினேன். பின்னர் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்தேன் என்று தெரிவித்தார். சிறுவன் இறந்ததும் அவனது கழுத்தில் இருந்த செயினை கழட்டிவிட்டு உடலை துணியால் சுற்றி, பீரோவுக்குள் வைத்து பூட்டிவிட்டேன் என்றும் மற்றவர்கள் அவனை தேடியபோதும் நானும் தெரியாதது போல் தேடினேன் என்று கூறினார்.
பாக்றதுக்கு எல்லாம் விலையில்லைங்கோ.. கார் ஷோருமில் சேல்ஸ்மேனை சினிமா பாணியில் அதிர வைத்த விவசாயி
கணவர் கைது
அன்றிரவு கணவர் வந்ததும் பாத்திமா நடந்ததை அனைத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் பாத்திமாவை கண்டித்த ஷரோபின், சிறுவன் இறந்தது தெரியாமல் இருக்க உடலை கடலில் வீசிவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இரவு ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் உடலை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், நகையை அடகு வைத்து ரூ.40ஆயிரத்தை வாணியக்குடியை சேர்ந்த பெண்ணிடம் கொடுத்ததன் மூலம் காவல் துறையிடம் சிக்கினேன் என்று பாத்திமா கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரது கணவர் ஷரோபினையும் போலீசார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆஹா, சூனாபானா ஊரே ஒண்ணு கூடிருச்சு.. இனிமே அலார்ட்டா இருந்துக்க டா.. ஊருக்கு மத்தியில் 90's கிட்ஸ் வைத்த பேனர்
- முதல்வர் ஐயா.. காப்பாத்துங்க.. உயிரை தான் மாய்ச்சிக்கணும்! கதறி அழும் பெண்! - என்ன நடந்தது..?
- Unknown நம்பரில் இருந்து வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. Attend பண்ண இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- கொஞ்சம் உங்க பையை காட்டுங்க.. என்ன அது பேப்பர்ல சுத்தியிருக்கீங்க..? போலீசாரை அதிர வைத்த பயணி..!
- 3 மாசத்துக்கு முன்னாடி தான் பழக்கம்.. கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சென்னை பெண்.. காதல் ஸ்டார்ட் ஆனது எப்படி தெரியுமா..?
- இனி நான் 'நடந்து' தான் போகணுமா...? 'மீன் விற்கும் மூதாட்டியை பஸ்ஸில் இருந்து இறக்கி விட்ட சம்பவம்...' - அதிரடி 'நடவடிக்கை' எடுத்த போக்குவரத்து கழகம்...!
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்திப்பு...!
- இன்னும் எவ்வளவு 'டௌரி' வேணும்னாலும் வாங்கி தரேன்...! தயவுசெய்து 'கதவ' திறங்க...! 'என் கணவர் எனக்கு வேணும்...' - நடுரோட்டில் அழுது துடித்த வக்கீல்...!
- ‘நான் ரொம்ப மன உளைச்சலில் இருக்கேன்’!.. கன்னியாகுமரியை அதிர வைத்த ‘திருமணம் ஆகாத வாலிபர்கள்’ போஸ்டர்..!
- தண்ணீரில் 'மிதக்கும்' கன்னியாகுமரி மாவட்டம்...! 'சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்த மரங்கள்...' - வெள்ள அபாய எச்சரிக்கை...!