தொப்புள் கொடி கூட எடுக்காமல்... பிறந்து சில மணி நேரத்திலேயே... குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி அருகே தொப்புள் கொடி கூட எடுக்கப்படாத நிலையில், ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது குண்டுபெட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கச் செல்வது வழக்கம். அதுபோல், இன்று காலையும் தேயிலைப் பறிக்க சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேயிலைச் செடியின் அருகில் கை, கால்கள் வெளியில் தெரிந்த நிலையில், சிறியப் பள்ளத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் ஒன்று காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்  பெண்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை, விலங்குகளால் தோண்டப்பட்ட நிலையில் கிடந்ததால் அவர்களும் உறைந்து போயினர்.  குழந்தையின் சடலத்தை மீட்டப்போது, அது ஆண் குழந்தை என்பதும், பிறந்து சில மணி நேரமே ஆகிய நிலையில், தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் மண்ணில் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் இறந்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

குழந்தை இறந்து பிறந்ததா அல்லது குழந்தை பிறந்தை மறைப்பதற்காக யாரேனும் கொன்று இப்படி மண்ணில் புதைத்தனரா என போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மஞ்சனக்கொரை மற்றும் உதகை அரசு தாவரவியல் பூங்கா ஆகியப் பகுதிகளில் வீசி செல்லப்பட்ட 2 ஆண் குழந்தைகளை மீட்டு பத்திரமாக பராமரித்து வரும் நிலையில், குழந்தைகளை வீசுவதைத் தடுக்க அரசால் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலை அருகில் தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. எனினும்  இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக அங்கு நடந்து வருவது அந்த ஊர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UMBILICAL, CORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்