‘எண்ட் கார்டே இல்லாமல் நீடிக்கும் பருவமழை?’.. ‘கருணையே இல்லாத மழை எப்போது நிற்கும்?’ - தமிழ்நாடு வெதர் மேன் கூறிய ‘அதி முக்கிய’ தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. தற்போது கருணையே இல்லாமல் பயிர்கள் நாசமாகும் அளவுக்கு பொழிந்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர் மேன் கூறியவை என்னவென்று பார்க்கலாம்.

இந்த பருவமழையில் உண்டான இரு புயல்களில் ஒன்று நிவர் புயல். இன்னொரு புயல் புரேவி புயல்.  இந்தப் புரேவி புயல் முழுமையாக புயலாக உருமாறி கரையை கடப்பதற்குள் வலுவிழந்தது. இதில் நிகர் புயல் நல்ல மழையை கொடுத்தது மட்டுமல்லாமல் பெரும் அச்சுறுத்தலை கொடுத்தது. அதைவிட பெரும் அச்சுறுத்தலை கொடுத்தது புரேவி.  ஆனாலும் புரேவி புயலின்போதும் நல்ல மழை பொழிந்ததைக் காணமுடிந்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி சென்னை வெள்ளக்காடாக மாறியது.

இப்படி கடந்த 5-ஆம் தேதி சென்னையில் இரவு முதல் தொடங்கி 14 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தாலும் புயல் உருவாகாமல் இப்படி மழை பெய்யுமா எனும் அளவுக்கு பெய்தது மழை. எனினும் ஜனவரி 11 ஆம் தேதியுடன் இந்த வடகிழக்கு பருவமழை முடிவடையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் பிப்ரவரி மாதம் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, “வடகிழக்கு பருவமழை முடிவில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது. பொதுவாக குளிர்காலத்தில் இந்த பருவ மழை பொழியாது.  ஆனால் தற்போது குளிர் காலத்திலும் இந்த மழை பொழிவதால் இந்த முறை தமிழகத்திற்கு குளிர் காலமே இல்லாமல் போகிறது.

ஜனவரி 18ஆம் தேதிக்கு பிறகு வறண்ட காற்று வந்த பிறகுதான் மழைப் பொழிவு நிற்கும்.

மீண்டும் ஜனவரி மாதம் கடைசியில் தொடங்கக் கூடிய மழை பிப்ரவரி மாதம் வரைக்கும் நீடிக்கவும் செய்யும். இப்போது நாம் பார்ப்பதெல்லாம் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மில்லி மீட்டர் வரை கடலூரில் தற்போது வரை மழை பதிவாகியுள்ளது.

ALSO READ: "ப்ளீஸ்.. நேரம் வரும்போது நாங்களே 'கண்டண்ட்' கொடுப்போம்!.. இத மட்டும் பண்ணாதீங்க!"... கோலி வைத்த ‘கோரிக்கை!’

டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை 200 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. புயல் சின்னம் ஏதும் உருவாகாமல் இப்படி அதிகமான மழை கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கருணையே இல்லாமல் பெய்து வருகிறது.

1923-ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இப்படி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்