வங்கக் கடலில் 48 மணிநேரத்தில் புயல்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தொடர்ந்து 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வுமண்டலமானது, தொடர்ந்து 48 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் தென்மேற்கு வங்க கடல் பகுதி இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதியில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் நாளை மறுநாள் மட்டும் 40-50 கிமீ காற்று வீசும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMD, RAIN, STORM, CYCLONE, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்