ரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா?'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 2021 - புதுவருடத்தின் முதல் மாதம் ஜன.31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏறக்குறைய 1 வருடம் ஆனதால், ஊரடங்கால் கட்டுப்பாட்டில் இருக்கும் திரை அரங்குகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக விஜய் ரசிகர்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தையும், சிம்பு ரசிகர்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தியும் 100 வீத தளர்வுகளுடன் முதல் நாள், முதல் ஷோவை கண்டு களிக்க முடியுமா என்கிற கேள்வியுடன் காத்திருந்தனர்.

இதனிடையே 50 % இருக்கைகளுடனும் முறையான கோவிட் பரவல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டு அதன்படி திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் திரையரங்குகள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகாததால்

50% இருக்கைகளுடன் கூடிய கட்டுப்பாடு தான் தொடரும் என அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

எனினும் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டுள்ளதாக புதிய தலைமுறை பிரத்தியேக செய்திக் குறிப்பினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்