'தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?'... 'கொரோனா எப்போது குறையும்'... முதல்வர் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த அவர் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது பேசிய முதல்வர், ''தமிழகத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களாலேயே, மீண்டும் கொரோனா பரவியது.
இந்தியாவிலேயே அதிகமாகத் தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு எவ்வளவு தீவிர முயற்சிகள் எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியம். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்'' எனக் கூறினார்.
கொரோனா எப்போது ஒழியும் என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், ''அது கடவுளுக்குத் தான் தெரியும் எனக் கூறினார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த மாத்திரையோட விலை ₹103...' '4 நாள்ல நல்ல ரிசல்ட் கிடைக்குது...' அவசரகால பயன்பாட்டின் கீழ் ஒப்புதல் பெற்ற நிறுவனம்...!
- 'அப்பாவை தொட விடுங்க...' 'கதறிய' இன்ஸ்பெக்டரின் 'குழந்தைகள்...' 'ஆம்புலன்சை' துரத்திச் சென்ற 'மனைவி...' 'கண்கலங்க வைத்த சோக நிகழ்வு...'
- ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போக வந்த ‘ஆம்புலன்ஸ்’.. கொரோனா ‘நோயாளி’ செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!
- "தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
- 'சென்னை'யில் அதிகரிக்கும் கொரோனா... நாளைக்குள் 'அண்ணா' பல்கலைக்கழகத்தை ஒப்படையுங்கள்!
- 2.25 லட்சம் மதிப்புள்ள 'சிறப்பு' ஊசிகள்... கடைசிவரை முயன்றும் 'காப்பாற்ற' முடியவில்லை... கமிஷனர் உருக்கம்!
- 'கொரோனா பரிசோதனைக்கு உண்மையான கட்டணம் என்ன?'.. நோயாளிகள் நலனுக்காக... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!
- கொங்கு மண்டலத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!.. மதுரையில் மேலும் 58 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்துள்ளனர்!.. அதிக அளவில் பரிசோதனை!.. அதிகரிக்கும் எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- திடீரென கட்டான கரண்ட்... முழு கவச உடையுடன் 'லிப்ஃட்'டுக்குள் சிக்கிய நர்ஸ்... அடுத்து நடந்த விபரீதம்!