'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' "இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா?..." 'யாருகிட்ட...!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள முதியவர் ஒருவர் அணிந்து வந்த வித்தியாசமான மாஸ்க் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளி, முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு சுகாதார விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள், மாஸ்க் அணிந்தபடி வெளியே வருகின்றனர். மாஸ்க்கை பொறுத்தவரை என்.95 அல்லது மூன்று லேயர்கள் கொண்ட மாஸ்க் அணிந்தால் மட்டுமே பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நம் ஊர் மக்கள் கைக்குட்டையால் முகத்தை கட்டிக் கொண்டும், அறிவுறுத்தப்படாத மாஸ்க்குகளை அணிந்தும், சேலை, சுடிதார் துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டும் வெளியில் சுற்றி வருகின்றனர். ஆனால் முதியவர் ஒருவர் வித்தியாசமான வகையில் சாக்குப் பையை முகத்தில் கட்டியபடி கம்பீரமாக இருச்சக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளார். இதைத் தாண்டி கொரோனா வைரஸ் தன்னை அண்டிவிடாது என்கிற தைரியத்தில் வித்தியாசமாக வலம் வந்துள்ளார். என்ன ஒரு பிரச்சினை என்றால் அந்த சாக்குப் பையிலேயே ஊருபட்ட வைரஸ்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால் தற்போதைய சூழலில் கொரோனாவை அருகில் விடக்கூடாது என்பது தான் அவரது ஒரே குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

CORONA, VIRAL PICTURE, OLD MAN, MASK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்