'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் கணவரை கொலை செய்துவிட்டு, கொரோனா வந்து செத்துவிட்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(49). இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பிழைப்பு தேடி வந்துள்ளார். புதுச்சேரியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த மஞ்சுநாதனுக்கு, சத்யா (37) என்ற மனைவியும், இரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை 11 மணிக்கு மஞ்சுநாதன் ரத்த காயங்களுடன் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது மனைவி வெளியே வந்து அவருக்கு பேய் பிடித்து விட்டது. கொரோனா நோய் வந்து, ரத்த வாந்தி எடுக்கிறார் என கத்தியுள்ளார்.
அப்போது நர்சிங் படிக்கும் அவரது மகள் சரளா ஆம்புலன்சை வரவழைத்து கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், மஞ்சுநாதன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தேகத்தின்பேரில், மஞ்சுநாதன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மஞ்சுநாதனின் மனைவி சத்யா முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். மஞ்சுநாதனை பேய் பிடித்து இருந்ததாகவும், பல நாட்கள் குடும்பத்தாரை அடித்து துன்புறுத்தியதால் மனநல மருத்துவர்கள், மாந்தீரிகம் செய்பவர்கள் என மாறி மாறி அழைத்து சென்று காண்பித்ததாகவும் கூறியுள்ளார். எனினும் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிப்பழக்கம் கொண்ட மஞ்சுநாதன் ஊடரங்கு உத்தரவால், குடிக்க முடியாமல் மனநலம் பாதித்தபடி இருந்துள்ளார்.
நேற்று காலை மீண்டும் அவர் பேய் வந்தது போல் அட்டகாசம் செய்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தார் கை கால்களை கட்டியுள்ளனர். இதனையும் மீறி அவர், மனைவி மற்றும் மகள்களை தாக்கியுள்ளார். இதில் ஆவேசமடைந்த சத்யா கட்டையால் கணவரை தாக்கியுள்ளார். இதனால் சில நிமிடங்களில் மஞ்சுநாதன் இறந்துள்ளார். இந்த சம்பவத்தை மறைக்க, கணவருக்கு கொரோனா என மனைவி சத்யா நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10 நிமிஷத்துல 5 பேர் சீரியஸாகிட்டாங்க’.. ‘நான் பயந்துட்டேன்’.. ‘தினமும் அழுதுகிட்டேதான் வீட்டுக்கு போவேன்’.. உருகிய நர்ஸ்..!
- BREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு!... 400க்கும் மேற்பட்டோர் கைது!... காவல்துறை அதிரடி!
- 'தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கல, அதனால...' முரண்பாடுகள் இருந்தாலும் அணைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும்... ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்...!
- 'வீட்டுல இருந்திருந்தா இது நடந்திருக்குமா'... 'கதறி துடித்த பெற்றோர்'... சென்னை அருகே நடந்த கோரம்!
- ‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...
- ‘ஊரே வெறிச்சோடி இருக்கு’.. ‘பாவம் சாப்பாட்டுக்கு இதுங்க எங்க போகும்’.. நெகிழ வைத்த சகோதரிகள்..!
- '3 மாதத்திற்கு கடன் தவணைகள் செலுத்த தேவையில்லை!'... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
- கொரோனா வைரஸை வென்ற 96 வயது பாட்டி...! 'அட்மிட் பண்ணினப்போ பயங்கர ஃபீவர் இருந்துச்சு...' முழுமையாக குணமடைந்ததாக தகவல்...!
- தந்தை ‘வெளியே’ அழைத்ததும்... ‘ஆசையாக’ கிளம்பிய ‘மகள்கள்’... ‘மனம்’ மாறி ‘காப்பாற்ற’ முயன்றும் நேர்ந்த ‘கொடூரம்’...
- ‘அப்பா.. என்ன காப்பாத்துங்கன்னு கண்முன்னாடியே விழுந்தா’.. ‘கொஞ்ச நாள்ல அவளுக்கு 4வது பிறந்தநாள்’.. கண்கலங்க வைத்த கொடூரம்..!