'விஷம்' குடித்த மனைவி' ...'வாட்ஸ்அப்பில்' அனுப்பிய சோகம் ... 'கலங்க வைக்கும் வீடியோ'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டு,அந்த வீடியோவை கணவனுக்கு அனுப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.சிங்கப்பூரில் வேலை செய்துவரும் இவருக்கு, அனிதா என்ற மனைவியும்,அனிரூத்,மோனிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கணவர் சிங்கப்பூரில் இருப்பதால் அவர்கள் கிராமத்தில் இருக்கும் வீட்டில் குழந்தைகளுடன் அனிதா வசித்து வந்தார்.
இதனிடையே கணவனும் மனைவியும் தினமும் செல்போனில் பேசி கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்குள்ளும் தொடர்ந்து பிரச்னை நிலவி வந்தது.இதனால் செல்போனில் பேசும் போது இருவரும் கடுமையாக சண்டையிட்டு வந்துள்ளனர்.இந்நிலையில் பிரச்சனை தீவிரமடைந்ததையடுத்து, மனமுடைந்த அனிதா வயலிற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார்.அதோடு தான் விஷம் குடிப்பதை வீடியோவாக எடுத்து,தனது கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இதனிடையே விஷம் குடித்ததால் மயக்கமடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே அனிதாவின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தனியார் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. ஆனால் மேலும் டந்த சோகம்!
- 'ஒரேயொரு ஃபேஸ்புக் பதிவு'... 'காதலர்கள் எடுத்த விபரீத முடிவு'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'!
- 'வாட்ஸ் அப் சாட்டிங்கால் வந்த விபரீதம்'... 'தந்தை, மகன் எடுத்த பரிதாப முடிவு'!
- ‘மனைவி தலையில் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்..’ கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..
- 'பெற்றோர் கண்முன்னே தீக்குளித்த காதலன்'... 'விபரீத முடிவு எடுத்த காதலி'... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!
- ‘இனி வாட்ஸ் அப்ல இத செய்ய முடியாது’.. வருகிறது அதிரடியான சில மாற்றங்கள்!
- ‘முதல்முறை வயலின் இசையைக் கேட்ட குழந்தை செய்த காரியம்..’ இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..
- 'மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்'... 'குழந்தைகள் கண் முன்னே நடந்த பரிதாபம்'!
- ‘வேறு பெண்ணுடன் நடனமாடியதால்’ தகராறு.. ‘கோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்..’
- 'ஏன் சார்'...'எங்க பொண்ணெல்லாம் 'டாக்டர்' ஆக கூடாதா'?...பெண்ணிற்கு நடந்த கொடூரம்...'கதறும் தாய்'!